தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
ருத்ராபூர், ஹல்துவானி, காசிப்பூர் நகரங்களின் செல்பேசி வலையமைப்பு தரத்தை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் மதிப்பீடு செய்தது
प्रविष्टि तिथि:
05 JUN 2026 3:25PM by PIB Chennai
உத்தராகண்ட் மாநிலம் ருத்ராபூர், ஹல்துவானி, காசிப்பூர் நகரங்களில் இடம் பெற்றுள்ள பல்வேறு பகுதிகளின் செல்பேசி வலையமைப்பு தரத்தை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்) மதிப்பீடு செய்தது.
பொதுவான தொலைத்தொடர்பு பயன்பாட்டாளர்களுக்கு தகவல் தெரிவிப்பதற்காக ஏப்ரல் 2026-ல் இத்தகைய சுயேச்சையான சோதனைகளை ட்ராய் நடத்தியது. தொலைத்தொடர்பு சேவை வழங்குவோரால் அளிக்கப்படும் செல்பேசி வலையமைப்பு சேவைகளின் (குரல் மற்றும் தரவு) நிகழ்நேர தரத்தை மதிப்பீடு செய்து சரிபார்ப்பது இந்த சோதனையின் நோக்கமாகும்.
இதன்படி, ட்ராய் நியமித்த முகமைகள் மூலம் ருத்ராபூர், ஹல்துவானி, காசிப்பூர் நகரங்களில் 408 கிமீ தூரத்திற்கு சோதானைகள் மேற்கொள்ளப்பட்டதோடு 14 முக்கிய இடங்களிலும் 3.2 கிமீ நடந்து சென்றும் சோதனைகள் நடத்தப்பட்டன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2269284®=3&lang=1
***
SS/SMB/KPG/SH
(रिलीज़ आईडी: 2269612)
आगंतुक पटल : 11