அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
உள்நாட்டு உயிரி எரிபொருள் தொழில்நுட்ப வணிகமயமாக்கலுக்கு மத்திய அரசு ஆதரவு
प्रविष्टि तिथि:
05 JUN 2026 5:28PM by PIB Chennai
மத்திய அரசின் அறிவியல், தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம், புனேயைச் சேர்ந்த கிரீன்ஜூல்ஸ் தனியார் நிறுவனத்தின் இரண்டாம் தலைமுறை டீசலுக்கு இணையான உயிரி எரிபொருள் தயாரிப்புத் திட்டத்திற்குத் முழு ஆதரவை அளித்துள்ளது. விவசாயக் கழிவுகள், வேளாண் பதனப்படுத்துதல் செயல்முறையில் உருவாகும் கழிவுகளிலிருந்து மேம்பட்ட உயிரி எரிபொருட்களை உற்பத்தி செய்வதற்கான வணிக அளவிலான புதிய வசதியை ஏற்படுத்துவதே இத்திட்டத்தின் முதன்மையான நோக்கமாகும்.
இத்திட்டத்தின் மூலம் ‘அபிலாஷா உயிரி எரிபொருள்’ எனப்படும் அடுத்த தலைமுறை புதுப்பிக்கத்தக்க டீசல், நாப்தா மாற்று எரிபொருட்கள் முற்றிலும் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படவுள்ளன. தற்போதைய என்ஜின்கள் அல்லது விநியோக உள்கட்டமைப்புகளில் எந்தவித மாற்றமும் செய்யாமல், வழக்கமான புதைபடிவ டீசலுக்குப் பதிலாக இதனை நேரடியாகப் பயன்படுத்தலாம்.
விவசாயக் கழிவுகளை மதிப்புமிக்க எரிசக்தியாக மாற்றுவதன் மூலம், பயிர்க்கழிவுகள் வயல்களில் எரிக்கப்படுவது பெருமளவு தவிர்க்கப்படும். இது தூய்மையான எரிசக்தி ஊக்குவிப்பு, கிராமப்புற பொருளாதார மேம்பாடு, எரிபொருள் இறக்குமதி மீதான சார்பு குறைப்பு உள்ளிட்ட தேசிய நலன்களை அடைய வழிவகுக்கும். இம்முயற்சி இந்தியாவின் தேசிய உயிரி எரிபொருள் கொள்கை, சுழற்சிப் பொருளாதார இலக்குகளுடன் ஒத்துப்போகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2269370®=3&lang=1
***
SS/PD/SH
(रिलीज़ आईडी: 2269500)
आगंतुक पटल : 12