புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
2025-26-க்கான வருடாந்திர மொத்த உள்நாட்டு உற்பத்தியின் தற்காலிக மதிப்பீடுகள் வெளியிடப்பட்டுள்ளன
இடுகை இடப்பட்ட நாள்:
05 JUN 2026 4:00PM by PIB Chennai
2025-26-க்கான வருடாந்திர மொத்த உள்நாட்டு உற்பத்தியின் தற்காலிக மதிப்பீடுகளையும் 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டு ஜிடிபி மதிப்பீடுகளையும் மத்திய புள்ளிவிரங்கள் மற்றும் திட்டஅமலாக்க அமைச்சகம் வெளியிடப்பட்டுள்ளது. 2022-23 என்பதை அடிப்படையாகக் கொண்டு வருடாந்தர மற்றும் காலாண்டு ஜிடிபி மதிப்பீடுகளின் புதிய தொடர்களை 2026 பிப்ரவரி 27 அன்று வெளியிட்டது.
2024-25-ம் ஆண்டுக்கான முதலாவது திருத்தப்பட்ட ஜிடிபி மதிப்பீடு ரூ.299.89 லட்சம் கோடியாக இருந்த நிலையில், 2025-26-ம் நிதியாண்டின் ஜிடிபி ரூ.323.12 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டின் 7.1 சதவீத வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில், 7.7 சதவீதம் அதிகமாகும்.
காலாண்டு மதிப்பீடுகளைப் பொறுத்தவரை 2024-25-ம் நிதியாண்டின் 4-வது காலாண்டின் ஜிடிபி ரூ.86.75 லட்சம் கோடி என்று மதிப்பிடப்பட்ட நிலையில், 2025-26-ம் நிதியாண்டின் 4-வது காலாண்டின் ஜிடிபி ரூ.94.65 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. வளர்ச்சி விகிதம் 9.1 சதவீதம் என்பதை இது காட்டுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2269286®=3&lang=1
****
TV/SMB/KPG/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2269488)
வருகையாளர் எண்ணிக்கை : 16