அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
சூரியனின் 11 ஆண்டு செயல்பாட்டு சுழற்சி குறித்த புதிய தகவல்கள் கண்டுபிடிப்பு
प्रविष्टि तिथि:
05 JUN 2026 3:54PM by PIB Chennai
இந்தியாவில் சேகரிக்கப்பட்ட மிகப்பழமையான தொடர்ச்சியான சூரிய தரவுகளுக்குப் பெயர் பெற்ற கொடைக்கானல் சூரிய ஆய்வகம், சூரியனின் மேற்பரப்பில் ஏற்படும் பிரம்மாண்ட வெப்பச்சலனம் சூரியனின் செயல்பாட்டில் எவ்வாறு தாக்கம் ஏற்படுத்துகின்றன என்பதைக் கண்டறியப் பெரிதும் உதவியுள்ளது. இது எதிர்கால சூரிய சுழற்சி கணிப்புகளுக்கான புதிய நுண்ணறிவுகளை வழங்குகிறது.
மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி நிறுவனமான இந்திய வானியற்பியல் நிறுவன விஞ்ஞானிகள், சூரிய சுழற்சி, அதன் இடைவெளி அகலங்கள் ஆகிவை குறித்து விரிவாக ஆய்வு நடத்தினர். கொடைக்கானல் சூரிய ஆய்வக கண்காணிப்பகத்தின் 100 ஆண்டுகளுக்கும் மேலான ஆவணக் காப்பகத் தரவுகளிலிருந்து 34,000 அரிய படங்களை ஆய்வு செய்த இந்த முக்கிய ஆராய்ச்சி, புகழ்பெற்ற சர்வதேச அறிவியல் இதழில் வெளியாகியுள்ளது.
சூரியனின் இடைவெளி அகலங்கள், தீவிரத்தன்மை ஆகியவை சூரியப்புள்ளிகளின் எண்ணிக்கையுடன் மிகவும் வலுவாகத் தொடர்பு கொண்டுள்ளதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். எந்தவொரு குறிப்பிட்ட அட்சரேகையும் அனைத்து அளவுகளுக்கான சூரிய சுழற்சியைத் துல்லியமாகப் பின்பற்றுவதில்லை என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது. இந்த முடிவுகள் சூரிய மேற்பரப்பில் ஏற்படும் காந்தப் பாய்வு இயக்கம், அதன் செயல்பாடுகளை முன்கூட்டியே துல்லியமாகக் கணிப்பதற்கான தற்போதைய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு பெரிதும் பயனுள்ளவையாக உள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2269299®=3&lang=1
****
TV/PD/SH
(रिलीज़ आईडी: 2269467)
आगंतुक पटल : 13