எஃகுத்துறை அமைச்சகம்
நாட்டின் எஃகு உற்பத்தி நடப்பாண்டு மே மாதத்தில் 14.21 மில்லியன் டன்களை எட்டி சாதனைப் படைத்துள்ளது
प्रविष्टि तिथि:
04 JUN 2026 2:13PM by PIB Chennai
நாட்டின் எஃகு உற்பத்தி, நுகர்வு சார்ந்த குறியீடுகளில் ஆண்டுதோறும் வளர்ச்சியைப் பதிவு செய்து வருகிறது. இதன்படி, கடந்த மே மாதத்தில் கச்சா எஃகு உற்பத்தி 14.21 மில்லியன் டன்களை எட்டி சாதனைப் படைத்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில் 2.9 சதவீதம் கூடுதலாகும். ஹாட் மெட்டல் உற்பத்தி ஆண்டுதோறும் இரண்டு சதவீதம் வரை அதிகரித்து வருகிறது. அதே வேளையில் பிக் அயர்ன் உற்பத்தி 1.1 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
கட்டுமானம், உள்கட்டமைப்பு வசதிகளின் மேம்பாடு, உற்பத்தி ஆகிய துறைகளில் ஏற்பட்டுள்ள தேவைகளின் காரணமாக எஃகு உற்பத்தி ஆண்டுதோறும் வளர்ச்சிக் கண்டு வருகிறது. நாட்டின் எஃகு உற்பத்தி முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 8.7 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
2026 ஏப்ரல், மே மாதங்களில் நாட்டின் எஃகு இறக்குமதி 1.37 மில்லியன் டன்னாகவும் ஏற்றுமதி 0.98 மில்லியன் டன்னாகவும் உள்ளன.
இந்தக் காலத்தில் இந்தியா எஃகு இறக்குமதி செய்யும் நாடாக இருந்தது. இதனி்டையே, திறன் விரைவாக்கம், விரைவான முதலீடுகள் போன்றவை காரணமாக 2025-ம் நிதியாண்டில், நாட்டின் ஒட்டுமொத்த கச்சா எஃகு உற்பத்தித் திறன் ஆண்டுதோறும் 220 மில்லியன் டன் என்ற அளவை எட்டியுள்ளது. இதன் மூலம் வரும் 2030-ம் ஆண்டுக்குள் 300 மில்லியன் டன் என்ற தேசிய கொள்கை வகுத்துள்ள இலக்கை அடையும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக செயல் நிறுவனம் பிலாயில் உள்ள எஃகு உற்பத்தி ஆலையின் தற்போதைய 6.8 மில்லியன் டன் என்ற நிலையிலிருந்து 10.2 மில்லியன் டன்னாக எஃகு உற்பத்தித் திறனை அதிகரிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2268816®=3&lang=1
****
TV/SV/KPG/SH
(रिलीज़ आईडी: 2269027)
आगंतुक पटल : 8