இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், லடாக்கின் எல்லைக் கிராமங்களில் இளைஞர் பங்களிப்பை வலுப்படுத்த ‘வளர்ச்சியடைந்த துடிப்பான கிராமத் திட்டம் 2026’ தொடக்கம்!

प्रविष्टि तिथि: 03 JUN 2026 2:33PM by PIB Chennai

மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் மை பாரத் அமைப்பு, 'வளர்ச்சியடைந்த துடிப்பான கிராமத் திட்டம் 2026'-இன் முதற்கட்டத்தைத் தொடங்கியுள்ளது. எல்லைக் கிராமங்களில் அடிமட்ட அளவிலான பங்களிப்பை வலுப்படுத்தவும், தேசிய ஒருமைப்பாட்டை வளர்க்கவும் இத்தவணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இணையவழி வினாடி-வினா போட்டி மூலம் நாடு முழுவதிலுமிருந்து தேர்வு செய்யப்பட்ட 500 இளம் தன்னார்வலர்கள் இந்த ஒரு வாரகால கிராமப்புறத் தங்குமிட திட்டத்தில் பங்கேற்கின்றனர். இவர்கள் லடாக், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களின் எல்லைக் கிராமங்களில் தங்கி, அங்குள்ள மக்களின் சமூக-பொருளாதார நிலைமைகள் மற்றும் கலாச்சார மரபுகளை நேரடியாகக் கண்டறிய உள்ளனர்.

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, 'தேசத்திற்கு முதலிடம்' என்ற பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது. இதன் கீழ், சுதேசி தயாரிப்புகளைப் பயன்படுத்துதல், ஆரோக்கியமான சமையல் முறைகள், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துதல், இயற்கை விவசாயத்தை ஊக்குவித்தல் மற்றும் உள்ளூர் சுற்றுலாவிற்கு ஆதரவளித்தல் ஆகிய ஐந்து முக்கியக் கொள்கைகள் குறித்து எல்லைக் கிராம மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். உள்துறை அமைச்சகம் மற்றும் இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை ஆகியவற்றுடன் இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2268315&reg=3&lang=1

(Release ID: 2268315)

****

TV/EA/SH


(रिलीज़ आईडी: 2268637) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , English , Urdu , हिन्दी