இந்திய போட்டிகள் ஆணையம்
யுபிஎல் குழும நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களின் மறுசீரமைப்பு தொடர்பான முன்மொழியப்பட்ட இணைப்பிற்கு இந்திய வணிகப் போட்டி ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது
प्रविष्टि तिथि:
03 JUN 2026 12:57PM by PIB Chennai
யுபிஎல் குழும நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களின் மறுசீரமைப்பு தொடர்பான முன்மொழியப்பட்ட வர்த்தக இணைப்பிற்கு இந்திய வணிகப் போட்டி ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த முன்மொழியப்பட்ட வர்த்தக இணைப்பு ஒரு மறுசீரமைப்பு நடவடிக்கையாகும். இது நிறுவனங்களுள் தொடர்புடைய பல்வேறு படிநிலைகளைக் கொண்டுள்ளது. இதன் விளைவாக, யுபிஎல் 1 நிறுவனத்தின் இரண்டு வர்த்தகப் பிரிவுகள், அதாவது (i) இந்தியப் பயிர் பாதுகாப்பு வர்த்தகம் (இது யுபிஎல் - எஸ்ஏஎஸ் நிறுவனத்தின் கீழ் இயங்குகிறது).
(ii) உலகளவில் பயிர் பாதுகாப்பு வர்த்தகம் (இது நேரடியாகவும், மறைமுகமாகவும் (துணை நிறுவனங்கள் வாயிலாக) கேமன் 1-ன் கீழ் இயங்குகிறது).
யுபிஎல் லிமிடெட் நிறுவனம் உலகளவில் வேளாண் சார்ந்த நடைமுறைகளுக்கு தீர்வு வழங்கும் நிறுவனமாகும். இது பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகள், நுண்ணூட்டச்சத்துக்கள், பயிர் பாதுகாப்புப் பொருட்கள், உயிரியல் தீர்வுகள், விதைகள் மற்றும் அறுவடைக்குப் பிந்தைய பராமரிப்புப் பொருட்கள் ஆகியவற்றின் ஆராய்ச்சி, மேம்பாடு, உற்பத்தி மற்றும் விற்பனை ஆகிய பணிகளில் ஈடுபட்டுள்ளது.
யுபிஎல் - எஸ்ஏஎஸ் நிறுவனம், இந்தியப் பயிர் பாதுகாப்பு வணிகத்தை நிர்வகித்து வருகிறது. மேலும் இந்தியாவில் பயிர் பாதுகாப்பு மற்றும் விதை நேர்த்திப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு வேளாண் சார்ந்த பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்கி வருகிறது.
யுபிஎல் 2 நிறுவனம் தற்போது இந்தியாவில் எவ்வித வணிகச் செயல்பாடுகளையும் கொண்டிருக்கவில்லை. எனினும், இந்த வணிக இணைப்பு நடவடிக்கை முழுமையடைந்த பிறகு, இந்திய மற்றும் உலகளவிலான பயிர் பாதுகாப்பு வணிகங்கள் இரண்டையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளும் நோக்கம் கொண்டது.
கேமன் 1 நிறுவனம் தற்போது உலககளவில் பயிர் பாதுகாப்பு வணிகத்தைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. மேலும் இது வழக்கமான பயிர் பாதுகாப்புப் பொருட்கள் மற்றும் உயிரியல் தீர்வுகள் சார்ந்த வணிகத்தில் ஈடுபட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2268267®=3&lang=1
(Release ID: 2268267)
****
TV/SV/SH
(रिलीज़ आईडी: 2268634)
आगंतुक पटल : 9