சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்தியப் பிரதேசத்தில், ஹிவார்கேடி -ரோஷ்னி-ஆஷாபூர்-ருதி பிரிவில் அமைந்துள்ள இடைநிலைச் சாலையை, 2-வழிச் சாலையாகத் தரம் உயர்த்துவதற்கும் தேஷ்கான் - ஜுல்வானியா பிரிவில் அமைந்துள்ள 2-வழிச் சாலையை 4-வழிச் சாலையாக அகலப்படுத்துவதற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல்

प्रविष्टि तिथि: 03 JUN 2026 3:35PM by PIB Chennai

மத்தியப் பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள என்ஹெச்-347பி தேசிய நெடுஞ்சாலையின் ஹிவார்கேடி -ரோஷ்னி-ஆஷாபூர்-ருதி பிரிவில் உள்ள இடைநிலைச் சாலையை இருவழிச் சாலையாகத் தரம் உயர்த்துவதற்கும் (125.01 கி.மீ), அதே நெடுஞ்சாலையின் தேஷ்கான் - ஜுல்வானியா பிரிவில் உள்ள இருவழிச் சாலையை 4-வழிச் சாலையாக அகலப்படுத்துவதற்கும் (108.643 கி.மீ) பிரதமர் திரு நரேந்திரமோடி தலைமையில் இன்று நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இத்திட்டப் பணிகள் ரூ.4,415.60 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளன.

இந்தத் தரம் உயர்த்தும் பணிகள் மூலம், பெதுல், கந்த்வா, கர்கோன், பர்வானி ஆகிய மாவட்டங்களில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காணப்படும். இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, கார்கோன் மாவட்டத்தில் 16.20 கி.மீ நீளமுள்ள ஒரு புதிய பசுமை வழி புறவழிச் சாலை அமைக்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் சராசரி பயண வேகம் அதிகரிக்கும். பயண நேரம் குறையும். மேலும் சாலைப் பாதுகாப்பு, எரிபொருள் பயன்பாட்டுத் திறன், வாகன இயக்கச் செலவுகள் ஆகியவை மேம்படும். இதன் விளைவாக, அப்பகுதியின் போக்குவரத்து வசதியும், சமூக-பொருளாதார வளர்ச்சியும் மேலும் மேம்படும்.  

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2268359&reg=3&lang=1

***

TV/IR/RJ/SH


(रिलीज़ आईडी: 2268581) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Malayalam