பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

போபாலில் ஜூன் 5 அன்று வர்த்தக முகாம் நடைபெறவுள்ளது

प्रविष्टि तिथि: 03 JUN 2026 12:31PM by PIB Chennai

மத்திய பெரு நிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள முதலீட்டாளர்கள் கல்வி, பாதுகாப்பு நிதி ஆணையம் மற்றும் இந்திய பங்குகள் பரிமாற்ற வாரியம் ஆகியவை இணைந்து போபாலில் 2026 ஜூன் 5 அன்று வர்த்தக முகாமிற்கு ஏற்பாடு செய்துள்ளது. கோரப்படாத ஈவுத்தொகைகள், பங்குகள் தொடர்பான விவகாரங்களுக்கு தீர்வு காண்பதில் முதலீட்டாளர்களுக்கு உதவும் ஒரே தளமாக இம்முகாம் செயல்படும். முதலீட்டாளர் சேவைகளை நேரடியாக அணுகவும், குறைகளுக்குத் தீர்வு காண்பதற்கும் இந்த முகாம் பயன்படும்.

6 முதல் 7 ஆண்டுகளாக கோரப்படாத ஈவுத்தொகைகள், பங்குகளை மீட்பதற்கான நேரடி வசதிகளை இதன் மூலம் பெற முடியும். நுகர்வோர் குறித்த தகவல்களை புதுப்பித்தல், நியமனதாரர் தொடர்பான சேவைகள் ஆகியவற்றை பெறலாம். நிலுவையில் உள்ள முதலீட்டாளர் கல்வி, பாதுகாப்பு நிதி ஆணையம் உரிமைக்கோரல் தொடர்பான விவகாரங்களுக்கு உடனடியாக உதவியும், தீர்வும் இம்முகாமில் அளிக்கப்படும்.

இம்முகாம், போபாலில் ஹோசங்காபாத் சாலையில் உள்ள விருந்தாவன் தோட்டத்தில் நடைபெறவுள்ளது. முகாமில் பங்கேற்க விரும்புவோர் www.iepf.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2268257&reg=3&lang=1

***

SS/IR/RJ/KR


(रिलीज़ आईडी: 2268321) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी