பாதுகாப்பு அமைச்சகம்
ஆண்டிகுவாவிற்கானப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தது ‘ஐஎன்எஸ் சுதர்சினி’ போர்க்கப்பல்
प्रविष्टि तिथि:
02 JUN 2026 7:59PM by PIB Chennai
இந்தியக் கடற்படையின் ‘சுதர்சினி’ போர்க்கப்பல், தனது நான்கு நாள் பயணத்தை நிறைவு செய்து 2026 மே 31 அன்று ஆண்டிகுவாவிலிருந்து புறப்பட்டது. நீண்டதூரப் பயணத்தின் ஒரு பகுதியாக அமைந்த இந்த பயணம், கரீபியன் நாடுகளுடனான இந்தியாவின் கடல்சார் உறவை வலுப்படுத்துவதில் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
இப்பயணத்தின் போது, ஆண்டிகுவா மற்றும் பார்புடாவின் பிரதமர் திரு. காஸ்டன் பிரவுன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் இக்கப்பலுக்கு வருகை தந்தனர். மேலும், கப்பலின் கமாண்டிங் அதிகாரி, ஆண்டிகுவா மற்றும் பார்புடா பாதுகாப்புப் படையின் தலைமைத் தளபதி பிரிகேடியர் டெல்பர்ட் பெஞ்சமினைக் கூட்டாகச் சந்தித்துப் பேசினார். இரு நாட்டுப் பாதுகாப்புப் படைகளுக்கும் இடையிலான தொழில்முறைப் பரிமாற்றங்கள் இந்த கடல்சார் உறவை மேலும் பலப்படுத்தியுள்ளன.
பொதுமக்கள் மற்றும் பார்வையாளர்களுக்காக இக்கப்பல் திறந்து வைக்கப்பட்டதன் மூலம், இந்தியக் கடற்படையின் தனித்துவமான பாரம்பரியம் மற்றும் பாய்மரப் பயிற்சி முறைகளை அவர்கள் நேரடியாகத் தெரிந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது. உலகமே ஒரு குடும்பம் என்ற இந்தியாவின் கொள்கைக்கேற்ப இந்தத் தூதரகப் பயணம் அமைந்துள்ளது. இங்கிருந்து புறப்படும் ‘சுதர்சினி’ போர்க்கப்பல், அமெரிக்க சுதந்திரத்தின் 250-வது ஆண்டைக் கொண்டாடும் சர்வதேசக் கடற்படை அணிவகுப்பில் பங்கேற்பதற்காக அடுத்ததாக அமெரிக்கா நோக்கிப் பயணிக்கிறது.
Release ID: 2268129
****
TV/EA/SH
(रिलीज़ आईडी: 2268167)
आगंतुक पटल : 59