எரிசக்தி அமைச்சகம்
ஹரியானாவில் மின்துறை தொடர்பான விவகாரங்களை மத்திய அமைச்சர் திரு மனோகர் லால் ஆய்வு செய்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
02 JUN 2026 11:12AM by PIB Chennai
ஹரியானாவில் மின்துறை தொடர்பான விவகாரங்களை மத்திய மின்சாரம், வீட்டுவசத, நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு மனோகர் லால் நேற்று சண்டிகரில் ஆய்வு செய்தார். இக்கூட்டத்தில் ஹரியானா மின்துறை அமைச்சர் திரு அனில் விஜ், மத்திய மாநில மின்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மாநில மின்சாரத்துறையும், மாநில மின்துறை பொதுத்துறை நிறுவனங்களும் ஒரு விரிவான செயல்திட்டத்துடன் செயல்படக் கூடிய முக்கிய அம்சங்களை திரு மனோகர் லால் எடுத்துரைத்தார். சீரமைக்கப்பட்ட விநியோக துறைத்திட்டம், விநியோக நிறுவனங்களின் செயல்பாடு, நிதி தொடர்பான அம்சங்கள் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
மின்சாரம் ஒரு சிறந்த பொருளாதாரம் என்றும் மின்சாரக் கொள்முதல் செலவைக் குறைத்தல், செலவினங்களை முறைப்படுத்துதல், வருவாயை அதிகரித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி நிறுவனங்கள் சிறந்த வணிகக் கொள்கையின் அடிப்படையில் இயக்கப்பட வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் வலியுறுத்தினார்.
ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணிகள் குறித்து ஆய்வு செய்த அவர், அப்பணிகளை விரைவுபடுத்துமாறு அறிவுறுத்தினார். ஹரியானாவில் ஆகஸ்ட் 31 முதல் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணிகளை தொடங்குவதற்கு அம்மாநில அரசு உறுதிபூண்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2267784®=3&lang=1
***
SS/IR/KPG/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2267893)
வருகையாளர் எண்ணிக்கை : 9