தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பஞ்சாப் தொலைத்தொடர்பு வட்டத்திற்கு உட்பட்ட பதிண்டா, ஸ்ரீ முக்த்சர் சாஹிப் மற்றும் அமிர்தசரஸ் - பதிண்டா ரயில் வழித்தடத்தில் மொபைல் நெட்வொர்க் தரத்தை டிராய் ஆய்வு செய்தது

प्रविष्टि तिथि: 01 JUN 2026 5:11PM by PIB Chennai

இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், பஞ்சாப் தொலைத்தொடர்பு வட்டத்திற்கு உட்பட்ட பதிண்டா மற்றும் ஸ்ரீ முக்த்சர் சாஹிப் நகரங்களிலும், அமிர்தசரஸ் - பதிண்டா ரயில் வழித்தடத்திலும் மொபைல் நெட்வொர்க் தரத்தை மதிப்பிடுவதற்கான பிரத்யேக கள ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வு கடந்த 2026 மார்ச் 16 முதல் 19-ஆம் தேதி வரை நடைபெற்றது.

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்கும் தொலைபேசி அழைப்புகள் மற்றும் இணையச் சேவைகளின் நிகழ்நேர தரத்தை சரிபார்ப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். இந்த ஆய்வில் நெட்வொர்க் இணைப்பு, அழைப்பு துண்டிக்கப்படும் விகிதம், இணையப் பதிவிறக்க மற்றும் பதிவேற்ற வேகம் போன்ற முக்கிய அளவுகோல்கள் மதிப்பீடு செய்யப்பட்டன. இதில் ஏர்டெல், பிஎஸ்என்எல், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்களின் 2G, 3G, 4G மற்றும் 5G சேவைகள் விரிவாக சோதிக்கப்பட்டன.

நுகர்வோர் விழிப்புணர்வுக்காகவும், சேவைகளை மேம்படுத்த தொலைத்தொடர்பு நிறுவனங்களை ஊக்குவிப்பதற்காகவும் இந்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தரம் குறித்த இந்த அறிக்கை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் பகிரப்பட்டுள்ளது. முழுமையான அறிக்கையை டிராயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (www.trai.gov.in) பொது மக்கள் தெரிந்துகொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2267561&reg=3&lang=1

***

TV/SE/RJ


(रिलीज़ आईडी: 2267670) आगंतुक पटल : 57
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी