பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த பிரச்சினைகள், 16-வது ஓய்வூதிய குறைதீர்ப்புக் கூட்டத்தில் நிவர்த்தி செய்யப்பட்டன

प्रविष्टि तिथि: 29 MAY 2026 7:20PM by PIB Chennai

ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களின் நலனுக்காகவும், அவர்களின் குறைகளை உரிய நேரத்தில் நிவர்த்தி செய்வதற்காகவும் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை தன்னை அர்ப்பணித்துள்ளது. மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல் துறைகளின் இணையமைச்சரும் (தனிப் பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொது குறைதீர்ப்பு, ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறைகளின் இணையமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் தலைமையில், 2026 மே 13 அன்று 16-வது அகில இந்திய ஓய்வூதிய குறைதீர்ப்புக் கூட்டம் நடைபெற்றது.

குறைதீர்ப்புக் கூட்டத்தில், 15.04.2026 வரை 45 நாட்களுக்கும் மேலாக நிலுவையில் இருந்த, 37 அமைச்சகங்கள் மற்றும் துறைகள் தொடர்பான 985 வழக்குகள் பரிசீலிக்கப்பட்டன. கூட்டம் நடைபெற்ற அன்று, மொத்தக் குறைகளில் ஏறக்குறைய 74%, அதாவது 728 வழக்குகள் உடனடியாகத் தீர்த்துவைக்கப்பட்டன.

வங்கிகள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்பினருடன் 27.05.2026 அன்று நடைபெற்ற தொடர் கூட்டத்தில் 85% குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டன.

அமைச்சகங்கள்/துறைகளின் தொடர்ச்சியான முயற்சிகள் மற்றும் முழுமையான அரசு என்ற அணுகுமுறையின் காரணமாக, நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பல குறைகள் இந்த நிகழ்வில் தீர்க்கப்பட்டன.

2026 ஜூலை மாதம் சிறப்பு இயக்கம் 3.0-ஐத் தொடங்கும் பணியில் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை ஈடுபட்டுள்ளது. இதன் மூலம், பல்வேறு நிர்வாக அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் நேரடியாகப் பெறப்பட்ட, நீண்ட காலமாக நிலுவையில் உள்ள குறைகள் ஒரு இயக்க முறையில் தீர்வுக்காக எடுத்துக்கொள்ளப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2266772&reg=3&lang=1

 

***

TV/BR/SE


(रिलीज़ आईडी: 2266890) आगंतुक पटल : 56
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी