இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
மை பாரத் இயக்கம், நாட்டின் ஒவ்வொரு மாவட்டம், வட்டாரம் மற்றும் இளம் குடிமகனை சென்றடையும்: மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா
இடுகை இடப்பட்ட நாள்:
29 MAY 2026 6:52PM by PIB Chennai
இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் இளைஞர் விவகாரத் துறையால் நடத்தப்படும், இரண்டு நாள் 'சிந்தனை முகாம்' நிகழ்வு, இன்று ஷில்லாங்கில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் (ஐஐஎம்) தொடங்கியது. தொடக்க அமர்வில், மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, இணையமைச்சர் திருமதி ரக்ஷா நிகில் காட்சே, மேகாலயா அரசின் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள் துறை அமைச்சர் திரு ஷக்லியார் வார்ஜ்ரி, மத்திய இளைஞர் நலன் துறை செயலாளர் டாக்டர் பல்லவி ஜெயின் கோவில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் உரையாற்றிய டாக்டர் மன்சுக் மாண்டவியா, "இன்று, 2.17 கோடி இளம் தன்னார்வலர்களுடன், 'மை பாரத்' ஒரு தேசிய மக்கள் இயக்கமாக உருவெடுத்துள்ளது. உண்மையான கடைக்கோடி இணைப்பை உறுதி செய்வதற்காக, இந்த இயக்கத்தை ஒவ்வொரு மாவட்டம், வட்டாரம் மற்றும் இளம் குடிமகனிடமும் கொண்டு சேர்ப்பதே எங்கள் இலக்கு" என்று கூறினார்.
ஜூன் 26 முதல் ஆகஸ்ட் 15 வரை நடைபெறும் நாடு தழுவிய போதைப்பொருள் ஒழிப்புப் பிரச்சாரத்தில் இளைஞர்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என்று அமைச்சர் கேட்டுக் கொண்டார். வந்தே மாதரத்தின் 150-வது ஆண்டு விழாவை நினைவுகூரும் வகையில் 150 கல்வி நிறுவனங்களில் நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், அனைத்து 783 மாவட்டங்களிலும் 'மை பாரத்' மையங்களை நிறுவுவதில் அமைச்சகம் கொண்டுள்ள உறுதிப்பாட்டையும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
நிகழ்ச்சியில் பேசிய இணையமைச்சர் திருமதி ரக்ஷா நிகில் காட்சே, "நமது இளைஞர்களின் ஆற்றலின் உதவியுடன் 'வளர்ச்சியடைந்த பாரதம் 2047' தொலைநோக்குப் பார்வையை நோக்கி நாம் கூட்டாகப் பணியாற்றுவதற்காக, அதிகாரிகளை ஒன்றிணைத்து யோசனைகள், சிறந்த நடைமுறைகள் மற்றும் கள அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதே இந்த சிந்தனை முகாமின் நோக்கமாகும்" என்று தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2266754®=3&lang=1
***
TV/BR/SE
(வெளியீட்டு அடையாள எண்: 2266885)
வருகையாளர் எண்ணிக்கை : 9