நித்தி ஆயோக்
இந்தியாவின் செமி கண்டக்டர்கள் தொழில்துறைக்கு 10 ஆண்டு கால வரைபடம்: நிதி ஆயோக் வெளியீடு!
இடுகை இடப்பட்ட நாள்:
29 MAY 2026 6:20PM by PIB Chennai
இந்தியாவின் செமி கண்டக்டர்கள் தொழில்துறையை உலக அளவில் வலுப்படுத்த, நிதி ஆயோக்கின் முன்னோடித் தொழில்நுட்ப மையம் புதிய 10 ஆண்டு கால வரைபடத்தை வெளியிட்டுள்ளது. நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் இந்த வரைபடத்தை வெளியிட்டனர்.
2035-ம் ஆண்டிற்குள் 120-150 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான செமி கண்டக்டர்கள் மதிப்புச் சங்கிலியை உருவாக்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பு, முதலீடு, மேம்பட்ட பேக்கேஜிங், மனிதவள மேம்பாடு மற்றும் உலகளாவிய கூட்டாண்மை ஆகிய ஐந்து தூண்களை அடிப்படையாகக் கொண்டு இந்த வரைபடம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்துப் பேசிய அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன், இந்தியா சிப்களை பயன்படுத்தும் நாடாக மட்டும் இருக்காமல், உலகளாவிய விநியோகச் சங்கிலியில் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுக்கும் என்று குறிப்பிட்டார். அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், 'இந்தியா செமி கண்டக்டர் மிஷன் 2.0' மூலம் வடிவமைப்பு மற்றும் தயாரிப்புத் திறனை உயர்த்தி, வளர்ச்சியடைந்த இந்தியா 2047' இலக்கை நோக்கி நாடு பயணிக்கிறது என்றார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2266727®=3&lang=1
***
TV/VK/SE
(வெளியீட்டு அடையாள எண்: 2266884)
வருகையாளர் எண்ணிக்கை : 4