ஜல்சக்தி அமைச்சகம்
ராய்ப்பூரில் மழைநீர் சேமிப்பில் புரட்சி: நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதில் மக்கள் பங்களிப்பு!
இடுகை இடப்பட்ட நாள்:
29 MAY 2026 5:47PM by PIB Chennai
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர், 'நீர் சேமிப்பில் மக்கள் பங்களிப்பு' திட்டத்தின் கீழ் மழைநீர் சேமிப்பு மற்றும் நிலத்தடி நீர் செறிவூட்டலில் ஒரு முன்மாதிரி நகரமாக உருவெடுத்துள்ளது. நகரமயமாக்கல் மற்றும் அதிகப்படியான நிலத்தடி நீர் எடுப்பால் ஏற்பட்ட தண்ணீர் தட்டுப்பாட்டைச் சமாளிக்க, மாநகராட்சி நிர்வாகம் பொதுமக்களுடன் இணைந்து இத்திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
கடந்த 2025-ம் ஆண்டில் மட்டும், நகரம் முழுவதும் 32,000-க்கும் மேற்பட்ட மழைநீர் சேமிப்புக் கட்டமைப்புகள் உருவாக்கப் பட்டுள்ளன. இதில், பொது-தனியார் பங்களிப்புடன் குடியிருப்புகள், வணிக வளாகங்கள் மற்றும் பொது இடங்களில் மழைநீரை சேமித்து நிலத்தடி நீராக மாற்றும் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2266694®=3&lang=1
***
TV/VK/SE
(வெளியீட்டு அடையாள எண்: 2266812)
வருகையாளர் எண்ணிக்கை : 8