வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புதுச்சேரியில் இரண்டு புதிய சிறப்பு பொருளாதார மண்டலங்கள் : மத்திய அரசு அனுமதி

இடுகை இடப்பட்ட நாள்: 29 MAY 2026 5:35PM by PIB Chennai

மத்திய வர்த்தக அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சிறப்பு பொருளாதார மண்டல வாரியம், புதுச்சேரியில் இரண்டு புதிய சிறப்பு பொருளாதார மண்டலங்களை  அமைப்பதற்கு அனுமதி அளித்துள்ளது. இந்தத் திட்டங்களில், உழவர்கரை நகராட்சி மூலம் தட்டாஞ்சாவடியில் அமைக்கப்படும் ஐடி, ஐடிஇஎஸ்  சிறப்பு பொருளாதார மண்டலம், இந்தியாவில் ஒரு நகராட்சி அமைப்பால் உருவாக்கப்படும் முதல் திட்டமாகும். மற்றொன்று, வில்லியனூர் வட்டத்தில் உள்ள காரசூரில், புதுச்சேரி தொழில் மேம்பாடு மற்றும் முதலீட்டுக் கழகத்தால் அமைக்கப்படும் பல்நோக்கு சிறப்பு பொருளாதார மண்டலமாகும்.

இந்தத் திட்டங்கள், புதுச்சேரியின் தொழில் வளர்ச்சி, முதலீடுகள் மற்றும் வேலைவாய்ப்புகளைப் பெருக்க முக்கிய வழிவகை செய்யும். மேலும், தமிழ்நாடு, அந்தமான் மற்றும் புதுச்சேரி  பிராந்தியத்தின் தொழில் சூழல் வேகமான வளர்ச்சியைக் கண்டு வருவதையும், பல்வகைப்பட்ட துறைகள் மற்றும் பெரிய அளவிலான திட்டங்கள் பிராந்திய பொருளாதார மேம்பாட்டிற்குப் பங்களிப்பதையும் இவை உறுதிப்படுத்துகின்றன. இந்த சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கான அறிவிப்புகள், இந்தியாவின் தொழில், தொழில்நுட்பம், உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளை வலுப்படுத்தும் ஒரு பரந்த வியூகத்தின் பிரதிபலிப்பாகும். இத்தகைய வளர்ச்சிகள் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், முதலீடுகளை ஈர்க்கவும், அதிகப்படியான வேலைவாய்ப்புகளை உருவாக்கி, இந்தியாவின் தொழில் கட்டமைப்பை மேலும் வலிமையாக்கவும் பெரிதும் உதவும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2266684&reg=3&lang=1

***

TV/VK/SE


(வெளியீட்டு அடையாள எண்: 2266756) வருகையாளர் எண்ணிக்கை : 52
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी