இந்திய போட்டிகள் ஆணையம்
மெர்குரியா எனர்ஜி நெதர்லாண்ட்ஸ் பி வி - டாடா இன்டர்நேஷனல் சிங்கப்பூர் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனங்களுக்கு இடையே கூட்டு நிறுவனத்தை உருவாக்க இந்திய போட்டி ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
26 MAY 2026 8:28PM by PIB Chennai
மெர்குரியா எனர்ஜி நெதர்லாண்ட்ஸ் பி வி - டாடா இன்டர்நேஷனல் சிங்கப்பூர் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனங்களுக்கு இடையே ஒரு கூட்டு நிறுவனத்தை உருவாக்குவதற்கு இந்தியப் போட்டி ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
பரிந்துரைக்கப்பட்ட இந்த ஒருங்கிணைப்பு நடவடிக்கை, மெர்குரியா எனர்ஜி குழும நிறுவனத்தின் துணை நிறுவனமான மெர்குரியா எனர்ஜி நெதர்லாண்ட்ஸ் பி வி - டாடா இன்டர்நேஷனல் சிங்கப்பூர் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனங்களுக்கு இடையே மேற்கொள்ளப்படும் ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தத்தின்படி, ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் சர்வதேச நிதி மையத்தில் ஒரு கூட்டு நிறுவனம் உருவாக்கப்படவுள்ளது.
மெர்குரியா நிறுவனம் நெதர்லாந்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு தனியார் வரையறுக்கப்பட்ட பொறுப்பு கொண்ட நிறுவனமாகும். இந்நிறுவனம், தனது துணை நிறுவனங்களுடன் இணைந்து, உலக அளவில் செயல்படும் எரிசக்தி, பண்ட வர்த்தக நிறுவனமாகத் திகழ்கிறது. மெர்குரியா நிறுவனத்தின் முதன்மைச் செயல்பாடுகள், கச்சா எண்ணெய், பிற பெட்ரோலியப் பொருட்கள் உள்ளிட்ட எரிசக்தி சார்ந்த பொருட்களின் வர்த்தகத்தில் கவனம் செலுத்துகின்றன. மேலும் பயோடீசல், இயற்கை எரிவாயு, மின்சாரம், கார்பன் உமிழ்வு உரிமைகள், நிலக்கரி, (சிறிய அளவில்) அடிப்படை உலோகங்கள், பெட்ரோ கெமிக்கல் பொருட்களின் வர்த்தகத்திலும் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
பரிந்துரைக்கப்பட்ட இந்த ஒருங்கிணைப்பு நடவடிக்கை நிறைவடைந்த பிறகு, ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் சர்வதேச நிதிசார் மையத்தில் அமையவுள்ள புதிய தனியார் நிறுவனம் (இலக்கு நிறுவனம்), மெர்குரியா, டாடா இன்டர்நேஷனல் சிங்கப்பூர் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு இடையேயான ஒரு கூட்டு நிறுவனமாகச் செயல்படும். இது புதிதாக உருவாக்கப்படும் ஒரு பண்டக வர்த்தகம், முதலீட்டு நிறுவனமாகும். இந்நிறுவனம், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலுள்ள தனது துணை நிறுவனங்கள் வாயிலாக, உலோகங்கள், கனிமங்கள், விவசாயப் பொருட்கள், எண்ணெய், எரிவாயுப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பண்டங்களின் வர்த்தகத்தில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளது.
ஆணையத்தின் விரிவான உத்தரவு விரைவில் வெளியிடப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2265620®=3&lang=1
***
SS/SV/SE
(வெளியீட்டு அடையாள எண்: 2266749)
வருகையாளர் எண்ணிக்கை : 5