நிலக்கரி அமைச்சகம்
நிலக்கரி வாயுவாக்கல் திட்டங்கள் குறித்த விளக்க நிகழ்ச்சி - புதுதில்லியில் நாளை நடத்துகிறது நிலக்கரி அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
27 MAY 2026 4:43PM by PIB Chennai
₹37,500 கோடி நிதி ஒதுக்கீட்டில் தொடங்கப்பட்ட, மேற்பரப்பு நிலக்கரி/பழுப்பு நிலக்கரி வாயுவாக்கல் திட்டங்களை ஊக்குவிப்பது குறித்து, நிலக்கரி அமைச்சகம் நாளை (28.05.2026) ஒரு விழிப்புணர்வு விளக்க நிகழ்ச்சியைப் புதுதில்லியில் நடத்த உள்ளது. இந்தியாவின் பரந்த நிலக்கரி, பழுப்பு நிலக்கரி வளங்களைத் திறன் வாய்ந்த முறையில் பயன்படுத்துவதற்கு, நிலக்கரி வாயுவாக்கலை ஊக்குவிப்பதில் இந்த முயற்சி ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகும்.
இந்நிகழ்ச்சியில் மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் திரு ஜி. கிஷன் ரெட்டி, இணையமைச்சர் திரு சதீஷ் சந்திர துபே ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர். மேலும், நிலக்கரி அமைச்சகத்தின் செயலாளர் திரு விக்ரம் தேவ் தத், கூடுதல் செயலாளர் திரு சனோஜ் குமார் ஜா, அமைச்சகத்தின் பிற மூத்த அதிகாரிகளும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்கள்.
நாட்டில் ஒரு வலுவான நிலக்கரி வாயுவாக்கல் சூழலமைப்பின் வளர்ச்சியைத் துரிதப்படுத்துவதற்கான அமைச்சகத்தின் தொடர் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வானது, கொள்கை வகுப்பாளர்கள், மாநில அதிகாரிகள், தொழில்துறைத் தலைவர்கள், முதலீட்டாளர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள், நிதி நிறுவனங்கள், பிற முக்கியத் தரப்பினரை ஒன்றிணைத்து, இந்தியாவில் நிலக்கரி வாயுவாக்கலுக்கான வாய்ப்புகள், எதிர்காலத் திட்ட வரைவு ஆகியவை குறித்து விவாதிக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2265905®=3&lang=1
***
TV/SV/PD
(வெளியீட்டு அடையாள எண்: 2266407)
வருகையாளர் எண்ணிக்கை : 9