பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
மேற்கு வங்கத்தில் பிரதமரின் ஜென்மன் மற்றும் தார்தி ஆபா - பழங்குடியினர் கிராம மேம்பாட்டுத் திட்டங்களின் அமலாக்கத்தை மத்திய பழங்குடியினர் நல அமைச்சகம் ஆய்வு செய்தது
இடுகை இடப்பட்ட நாள்:
27 MAY 2026 6:54PM by PIB Chennai
மத்திய பழங்குடியினர் நல அமைச்சகத்தின் செயலாளர் திருமதி. ரஞ்சனா சோப்ரா தலைமையில், மே 27, 2026 அன்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மேற்கு வங்க மாநில அரசின் பழங்குடியினர் மேம்பாட்டுத் துறையின் முதன்மைச் செயலாளர் திருமதி. சோட்டன் தெண்டுப் லாமா, அமைச்சகம் மற்றும் அதனுடன் இணைந்த அமைப்புகளைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளும் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் கூடுதல் செயலாளர் திரு. மனிஷ் தாக்கூர், இணைச் செயலாளர் திரு. பிரிஜ் நந்தன் பிரசாத், தேசிய பழங்குடியின நிதி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் திரு. டி. ரௌமுவான் பைட், இணைச் செயலாளர் திரு. அனந்த் பிரகாஷ் பாண்டே, பழங்குடியின மாணவ கல்விக்கான தேசிய சங்கத்தின் ஆணையர் டாக்டர். பிரதீமா மற்றும் அமைச்சகத்தின் பிற மூத்த அதிகாரிகளும் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில், மேற்கு வங்க மாநிலத்தில் பழங்குடியினர் நல அமைச்சகத்தின் பல்வேறு திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளின் அமலாக்கம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. எதிர்காலச் செயல் திட்டங்கள் குறித்தும் விரிவாக இதில் விவாதிக்கப்பட்டது. பல்வேறு துறைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல், நிதிப் பயன்பாட்டை மேம்படுத்துதல் மற்றும் பழங்குடியினர், 'குறிப்பாகப் பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் குழுக்கள்' வசிக்கும் பகுதிகளில் நிலுவையில் உள்ள நலத்திட்டப் பணிகளை விரைவுபடுத்துதல் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2265995&v=3231232423sdcdvchg®=3&lang=2
***
TV/SV/PD
(வெளியீட்டு அடையாள எண்: 2266252)
வருகையாளர் எண்ணிக்கை : 11