இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
‘வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கு போதைப்பழக்கம் இல்லாத இளைஞர்கள்' மாநாடு மற்றும் சிந்தனை முகாமை மேகாலயாவின் ஷில்லாங்கில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் நடத்தவுள்ளது
प्रविष्टि तिथि:
27 MAY 2026 5:28PM by PIB Chennai
மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம், ‘எனது இளைய பாரதம்' அமைப்புடன் இணைந்து, மேகலாயாவின் ஷில்லாங்கில் உள்ள ஐஐஎம் வளாகத்தில் மே 28 அன்று ‘வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கு போதைப்பழக்கம் இல்லாத இளைஞர்கள்' மாநாட்டையும், மே 29, 30 ஆகிய தேதிகளில் வடகிழக்கு பிராந்திய ‘சிந்தனை அரங்க’ கூட்டத்தையும் நடத்துகிறது.
இம்மாநாடுகளில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா மற்றும் இணையமைச்சர் திருமதி ரக்ஷா நிகில் கட்சே ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றுகின்றனர். வடகிழக்கு பிராந்தியத்தில் இளைஞர்களிடையே அதிகரித்து வரும் போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துதல், சிறந்த மறுவாழ்வு உத்திகளை உருவாக்குதல் மற்றும் 2047-க்குள் போதைப்பொருள் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவது குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2265933®=3&lang=1
***
TV/PD/SE
(रिलीज़ आईडी: 2266010)
आगंतुक पटल : 49