தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
ஜூன் 23-ல் தில்லியில் தொலைத்தொடர்புத் துறை சார்பில் ஓய்வூதியர் குறைதீர்ப்பு முகாம்
இடுகை இடப்பட்ட நாள்:
27 MAY 2026 4:33PM by PIB Chennai
மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறையின் கீழ் இயங்கும், தில்லியில் உள்ள முதன்மைத் தொலைத்தொடர்புக் கணக்கு கட்டுப்பாட்டாளர் அலுவலகம், தில்லி தேசிய தலைநகர் பிராந்தியத்தில் வசிக்கும் தொலைத்தொடர்பு வட்டத்துடன் தொடர்புடைய ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்காக ஒரு ஓய்வூதிய குறை தீர்ப்பு முகாமை ஏற்பாடு செய்துள்ளது.
தில்லி வட்டத்தின் தொலைத்தொடர்புத் துறை, பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் பிரிவுகளைச் சேர்ந்த ஓய்வூதியதாரர்களுக்காக இந்த ஓய்வூதிய முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவர்களின் ஓய்வூதிய விவகாரங்களான ஆணைகள் வழங்குதல், பணிக்காலப் பதிவேடுகளைப் பராமரித்தல், ஓய்வூதியம் வழங்குதல், பிற ஓய்வூதியம் தொடர்பான விஷயங்கள் தில்லியில் உள்ள முதன்மை மத்திய கணக்காளர் அலுவலகத்தால் கையாளப்படுகின்றன.
23 ஜூன் 2026 அன்று காலை 11 மணிக்கு குறை தீர்ப்பு முகாம் தொடங்குகிறது. 01 ஜனவரி 2026 நிலவரப்படி ஆறு மாதங்களுக்கு மேல் நிலுவையில் உள்ள குறைகளைத் தீர்ப்பதற்காக இந்த முகாம் நடத்தப்படுகிறது.
ஓய்வூதியதாரர்கள் தங்களது குறைகளை cca.dl-dot[at]nic[dot]in என்ற மின்னஞ்சல் முகவரியில் ஜூன் 10-ம் தேதிக்குள் பதிவு செய்யலாம் 1800118119 என்ற கட்டணமில்லா உதவி எண் மூலமாகவும் குறைகளை பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2265882®=3&lang=1
***
SS/PLM/SE
(வெளியீட்டு அடையாள எண்: 2265991)
வருகையாளர் எண்ணிக்கை : 10