அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
இந்தியா - ஸ்பெயின் இடையேயான அறிவியல், தொழில்நுட்ப ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்த கலந்துரையாடல்
இடுகை இடப்பட்ட நாள்:
25 MAY 2026 7:12PM by PIB Chennai
ஸ்பெயின் நாட்டின் அறிவியல், புத்தாக்கம் மற்றும் பல்கலைக்கழகங்கள் அமைச்சகத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் இவா ஒர்டேகா-பைனோ தலைமையிலான உயர்நிலைக் குழு, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை (தனிப்பொறுப்பு) அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கை புதுதில்லியில் மே 25 2026 அன்று சந்தித்துப் பேசியது. இச்சந்திப்பின் போது, இருநாடுகளுக்கும் இடையே விண்வெளி இயற்பியல், செயற்கை நுண்ணறிவு, விண்வெளி அறிவியல், தொழில்துறை ஆராய்ச்சி உள்ளிட்ட வளர்ந்து வரும் அதிநவீன தொழில்நுட்பத் துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
தொழில்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் இந்தியா - ஸ்பெயின் இடையேயான பத்தாண்டு கால நட்புறவை பாராட்டிய டாக்டர் ஜிதேந்திர சிங், இருநாடுகளும் இணைந்து செயல்படுத்திய மூலம் வணிக ரீதியான தொழில்நுட்பங்களும், சிறந்த ஆராய்ச்சி முடிவுகளும் கிடைத்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்தார். இக்கூட்டமைப்பின் கீழ் தொழில்துறையினர், புத்தாக்க நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதை அவர் வரவேற்றார்.
உயிரி மருத்துவ அறிவியல், புற்றுநோய் ஆராய்ச்சி, உயிரி தொழில்நுட்பம் ஆகிய துறைகளிலும் கல்வி, அறிவியல் நிறுவனங்களுக்கு இடையேயான கூட்டுறவை மேலும் விரிவுபடுத்த இருதரப்பும் ஒப்புக்கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2265095®=3&lang=1
***
(Release ID: 2265095)
SS/EA /KR
(வெளியீட்டு அடையாள எண்: 2265849)
வருகையாளர் எண்ணிக்கை : 12