ஆயுஷ்
azadi ka amrit mahotsav

ஆயுர்வேதம், சித்தா, யுனானி மருத்துவ முறைகளுக்கு சர்வதேச அளவிலான விதிகளை உருவாக்க ஆயுஷ் அமைச்சகத்தின் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம்

இடுகை இடப்பட்ட நாள்: 27 MAY 2026 12:49PM by PIB Chennai

ஆயுர்வேதம், சித்தா, யுனானி மருத்துவ முறைகளுக்கான 'சர்வதேச சுகாதார வகைப்பாடு', 'தேசிய சுகாதார விதிகள்' ஆகியவற்றை உருவாக்குவது தொடர்பான இரண்டு நாள் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தை மத்திய ஆயுஷ் அமைச்சகம் இணையவழியில் நடத்தியது. ஆயுஷ் அமைச்சகம் - உலக சுகாதார நிறுவனம் இடையே கையெழுத்தான வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாரம்பரிய மருத்துவ நடைமுறைகளை உலகளாவிய ஐசிஹெச்ஐ கட்டமைப்போடு ஒருங்கிணைப்பதே இதன் முதன்மை நோக்கமாகும்.

இக்கூட்டத்திற்கு ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் திரு வைத்யா ராஜேஷ் கோடேச்சா தலைமை தாங்கினார். உலகளவில் தரப்படுத்தப்பட்ட, அறிவியல் பூர்வமான மருத்துவ விதிமுறைகளை உருவாக்குவதன் மூலம், எல்லைகளைக் கடந்து மருத்துவத் தரவுப் பரிமாற்றம், மருத்துவ ஆராய்ச்சி, காப்பீட்டுத் திட்டங்களுடன் ஆயுஷ் மருத்துவத்தை எளிதாக ஒருங்கிணைக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார். உலக சுகாதார நிறுவனத்தின் தொழில்நுட்ப அதிகாரி டாக்டர் நெனாட் கோஸ்டான்செக் உள்ளிட்ட சர்வதேச நிபுணர்கள் இக்கூட்டத்தின் எதிர்காலத் திட்டங்கள், உலகளாவிய தரநிலைகள் குறித்து விரிவாக ஆலோசித்தனர்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2265743&reg=3&lang=1

***

SS/PD/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2265843) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati