தேசிய மனித உரிமைகள் ஆணையம்
டேராடூனில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் நோயாளி ஒருவர் உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம்: தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை
இடுகை இடப்பட்ட நாள்:
26 MAY 2026 8:31PM by PIB Chennai
உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மே 20, 2026 அன்று ஏற்பட்ட தீ விபத்து குறித்த ஊடக அறிக்கையை, தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. கிடைத்த தகவல்களின்படி, 14 நோயாளிகள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். அவர்களில், ஒரு பெண் நோயாளி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், மற்ற நான்கு பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
செய்தி அறிக்கையின் தகவல்கள் உண்மையாக இருந்தால், அது மனித உரிமை மீறல் என்ற ஒரு தீவிரமான பிரச்சினையை எழுப்புகிறது என ஆணையம் கருதுகிறது. எனவே, இந்த விவகாரம் குறித்து இரண்டு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோரி, உத்தராகண்ட் தலைமைச் செயலாளர் மற்றும் டேராடூன் மூத்த காவல் கண்காணிப்பாளருக்கு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மே 21, 2026 அன்று வெளியான ஊடக அறிக்கையின்படி, குளிர் சாதன இயந்திரத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக வெடிப்பு நிகழ்ந்ததாகவும், அதன் பிறகு தீ பரவத் தொடங்கியதாகவும் கூறப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2265624®=3&lang=1
***
TV/RB/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2265679)
வருகையாளர் எண்ணிக்கை : 6