இந்திய போட்டிகள் ஆணையம்
இன்டோவிடா இந்தியா நிறுவனத்தை இபிஎல் நிறுவனத்துடன் இணைக்க இந்திய வணிகப் போட்டி ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
26 MAY 2026 8:27PM by PIB Chennai
இன்டோவிடா இந்தியா தனியார் நிறுவனத்தை இபிஎல் நிறுவனத்துடன் இணைப்பதற்கு, இந்திய வணிகப் போட்டி ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
பரிந்துரைக்கப்பட்டுள்ள இந்த இணைப்பு நடவடிக்கை,
இன்டோவிடா இந்தியா நிறுவனத்தை இபிஎல் நிறுவனத்துடன், இணைக்கும் நடவடிக்கை வாயிலாக இணைப்பதை உள்ளடக்கியதாகும். மேலும், இந்த இணைப்புக்கு ஈடாக, இபிஎல் நிறுவனம் (அதாவது, இணைப்புக்குப் பிந்தைய புதிய நிறுவனம்), இன்டோவிடா இந்தியா நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் பங்குகளை வெளியிட்டு ஒதுக்கீடு செய்யும்.
இன்டோவிடா இந்தியா என்பது புதிதாகத் தொடங்கப்பட்ட ஒரு இந்திய நிறுவனமாகும். இது இண்டோராமா நெதர்லாண்ட்ஸ் பிவி நிறுவனத்தின் முழு உரிமையுள்ள துணை நிறுவனமாகச் செயல்படுகிறது. இன்டோவிடா இந்தியா- இண்டோராமா நெதர்லாண்ட்ஸ் பிவி ஆகிய நிறுவனங்கள், இண்டோராமா கூட்டு பொது நிறுவனம், அதன் துணை நிறுவனங்களை உள்ளடக்கிய குழுமத்தின் ஒரு அங்கமாகத் திகழ்கின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2265619®=3&lang=1
***
TV/SV/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2265674)
வருகையாளர் எண்ணிக்கை : 15