சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர், தில்லி, தேசிய தலைநகரைச் சுற்றியுள்ள பகுதிகளில், காற்று மாசு தடுப்பு செயல் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து, தில்லி முதலமைச்சருடன் ஆய்வு செய்தார்
प्रविष्टि तिथि:
26 MAY 2026 6:58PM by PIB Chennai
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ், தேசியத் தலைநகரில் காற்றின் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்காக, இன்று தில்லி முதலமைச்சர் திருமதி ரேகா குப்தா, அரசின் மூத்த அதிகாரிகளுடன் விரிவான ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார். இக்கூட்டத்தின்போது, குளிர்காலம் தொடங்குவதற்கு முன்பாக, மாசு அளவுகளில் குறிப்பிடத்தக்க குறைவை உறுதி செய்வதற்கான, நடவடிக்கைகளை விரைவாகச் செயல்படுத்துதல், பல்வேறு முகமைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல், விதிமுறைகளை தொய்வின்றி அமல்படுத்துதல் ஆகியவற்றின் அவசியத்தை அமைச்சர் வலியுறுத்தினார். இக்கூட்டத்தில், பொதுப்பணித் துறை அமைச்சர் திரு. பிரவேஷ் சாஹிப் சிங், சுற்றுச்சூழல், வனம் மற்றும் வனவிலங்குத் துறை அமைச்சர் திரு சர்தார் மஞ்சிந்தர் சிங் சிர்சா ஆகியோர் கலந்துகொண்டனர்.
காற்று மாசைக் கட்டுப்படுத்துவதற்கு, தொடர்புடைய அனைத்துத் தரப்பினரின் தொடர்ச்சியான, ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் அவசியம் என்பதை திரு. யாதவ் சுட்டிக்காட்டினார். தில்லி அரசு மேற்கொண்டு வரும் முயற்டுகளுக்கு அவர் பாராட்டுத் தெரிவித்த அவர், செயல்பாட்டில் கண்டறியப்பட்டுள்ள இடைவெளிகள் இருப்பின், அவற்றை ஒரு 'பணித் திட்டமாகக் கருதி போர்க்கால அடிப்படையில் சரிசெய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். வரவிருக்கும் மாதங்கள் தில்லியின் காற்றுத் தர மேலாண்மைக்குப் மிக முக்கியமானவை என்றும் அவர் கூறினார். பொதுமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும், திட்டமிடப்பட்ட நடவடிக்கைகளை உரிய நேரத்தில் நிறைவு செய்தல், விதிமுறைகளைத் தொய்வின்றி அமல்படுத்துதல், கள அளவில் ஒருங்கிணைந்து செயல்படுதல் ஆகியவை மிகவும் இன்றியமையாத நடவடிக்கைகள் என்று திரு. பூபேந்தர் யாதவ் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2265580®=3&lang=1
***
TV/SV/RJ
(रिलीज़ आईडी: 2265623)
आगंतुक पटल : 57