சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

புதுவை பல்கலைக்கழகம் தேசிய நாடகப் பள்ளியும் இணைந்து பாரம்பரிய நாடகக் கலையில் கல்விசார் சாதனை

இடுகை இடப்பட்ட நாள்: 26 MAY 2026 6:44PM by PIB Chennai

புதுவைப் பல்கலைக்கழகத்தின் நிகழ்த்து கலை மற்றும் மத்திய கலாச்சார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய நாடகப் பள்ளி (National School of Drama - NSD), புதுதில்லி ஆகியவை இணைந்துஇந்திய பாரம்பரிய நாடக மரபில் தெருக்கூத்து தயாரிப்பு பயிற்சி முகாம்என்ற நிகழ்ச்சியின் இறுதி அரங்கேற்றத்தை புதுவைப்  பல்கலைக்கழக கருத்தரங்கு மற்றும் கலாச்சார மையம் (CCC) அரங்கில் நடத்தின.

திரௌபதி வச்திராபரணம்எனும் பாரம்பரிய தெருக்கூத்து நிகழ்ச்சி, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தேசிய நாடகப் பள்ளி முதல் ஆண்டு மாணவர்களால் அரங்கேற்றப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு பத்மஸ்ரீ புரிசை கண்ணப்ப சம்பந்தன், உதவி குரு பழனி முருகன் ஆகியோர் பயிற்சி வழங்கினர்

ஏப்ரல் 21 முதல் மே 25 வரை 35 நாட்கள் நடைபெற்ற இப்பயிற்சி முகாம், தேசிய நாடகப் பள்ளி மாணவர்களின் கல்வி மற்றும் நடைமுறை நாடகப் பயிற்சியின் ஒரு பகுதியாக நடைபெற்றது. தெருக்கூத்து மரபின் உடலசைவு, முகபாவனை, இசை, நடிப்பு, பாத்திர வடிவமைப்பு, ஆடை அமைப்பு மற்றும் பாரம்பரிய அரங்கேற்ற முறை ஆகியவற்றில் மாணவர்களுக்கு ஆழமான பயிற்சி அளிக்கப்பட்டது.

தேசிய நாடகப் பள்ளியுடன் இணைந்து நடைபெற்ற இந்நிகழ்ச்சி, நாடகக் கலைத்துறைக்கு ஒரு முக்கிய கல்விசார் மைல்கல்லாக அமைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டது.

இக்கல்வியாண்டில் நாடகக் கலைத்துறை மற்றும் தேசிய நாடகப் பள்ளி இணைந்து பல்வேறு கல்வி மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளை முன்னெடுத்துள்ளன. அதில் பாரத் ரங்க் மகோத்சவ் (BRM) நாடக விழா, புதுவைப்  மற்றும் கேரள BRM விழாக்களில் நாடகக் கலைத்துறை நாடக அரங்கேற்றங்கள், குழந்தைகள் நாடகப் பயிற்சி முகாம் மற்றும் தற்போதைய தெருக்கூத்து தயாரிப்பு பயிற்சி முகாம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

புதுவைப் பல்கலைக்கழக பதிவாளர் ஆர். குணசேகரன், மாணவர்களின் மேடை ஆற்றல், ஈடுபாடு மற்றும் குறுகிய காலத்தில் பாரம்பரிய நாடக வடிவத்தை சிறப்பாக கற்றுத் திகழ்ந்த திறனை பாராட்டினார்.

***

TV/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2265585) வருகையாளர் எண்ணிக்கை : 20
இந்த வெளியீட்டை படிக்க: English