எஃகுத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

எஃகு இறக்குமதி சிக்கல்கள் குறித்த பொது கலந்தாய்வுக் கூட்டத்திற்கு மத்திய எஃகு அமைச்சகம் ஏற்பாடு

இடுகை இடப்பட்ட நாள்: 25 MAY 2026 8:21PM by PIB Chennai

எஃகு இறக்குமதி தொடர்பான பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் குறித்து விவாதிப்பதற்கு இணையவழியிலான பொது கலந்தாய்வுக் கூட்டத்தை நாளை மறுநாள் (2026 மே 27) அன்று நடத்த மத்திய எஃகு அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இக்கூட்டத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் தொழில் கூட்டமைப்புகள் தங்களின் சிம்ஸ், சரல் சிம்ஸ் மற்றும் க்யூஓ விலக்குகள் தொடர்பான கோரிக்கைகளையும் பிரச்சினைகளையும் நேரடியாக முன்வைக்கலாம்.

இந்த இணையவழிக் கலந்தாய்வில் பங்கேற்க விரும்பும் நிறுவனங்கள், மே 26, 2026 அன்று மாலை 5:00 மணிக்குள் tech-steel[at]nic[dot]in என்ற மின்னஞ்சல் முகவரிக்குத் தங்கள் கோரிக்கைகளை அனுப்பி, தங்களுக்கான பிரத்யேக நேரத்தைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின்னஞ்சல் அனுப்பும் போது, நிறுவனத்தின் பெயர், தொழில் துறை (ஆட்டோமொபைல், விண்வெளி, பாதுகாப்புத் துறை போன்றவை), எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்த சுருக்கமான விளக்கம் (அதிகபட்சம் 50 வார்த்தைகள்) மற்றும் பங்கேற்பாளரின் விவரங்களை தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.

இக்கூட்டத்தில் மூன்றாம் தரப்பு பிரதிநிதித்துவத்திற்கு அனுமதி இல்லை. விண்ணப்பித்த நிறுவனங்களுக்கான குறிப்பிட்ட நேர அட்டவணை மற்றும் இணையவழி கூட்டத்திற்கான இணைப்பு ஆகியவை பின்னர் தனியாகப் பகிரப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. எஃகு இறக்குமதியாளர்கள் தங்களின் குறைகளைத் தீர்த்துக் கொள்ள இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2265152&reg=3&lang=1

***

TV/PD/RJ 


(வெளியீட்டு அடையாள எண்: 2265211) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी