ஆயுஷ்
azadi ka amrit mahotsav

மத்திய அமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ் தலைமையில், ஆயுஷ் அமைச்சகத்தின் நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவின் நான்காவது கூட்டம் நடைபெற்றது

प्रविष्टि तिथि: 25 MAY 2026 8:38PM by PIB Chennai

ஆயுஷ் அமைச்சகத்தின் மத்திய இணையமைச்சரும் (தனிப் பொறுப்பு), சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சருமான திரு பிரதாப்ராவ் ஜாதவ், புதுதில்லியில் நடைபெற்ற ஆயுஷ் அமைச்சகத்தின் நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவின் நான்காவது கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில், “இந்தியாவில் யோகா மற்றும் இயற்கை மருத்துவம்என்ற தலைப்பில் கவனம் செலுத்தப்பட்டதுடன், தடுப்பு மருத்துவ பராமரிப்பை வலுப்படுத்துதல், நல்வாழ்வை மேம்படுத்துதல் மற்றும் இந்தியாவின் பாரம்பரிய சுகாதார முறைகளை உலக அளவில் கொண்டு செல்லுதல் ஆகியவற்றுக்கான அரசின் முயற்சிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் பேசிய அமைச்சர், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், தற்போது உலகளாவிய நல்வாழ்வு இயக்கத்தின் முக்கியத் தூண்களாக உருவெடுத்து வருகின்றன என்று கூறினார். தொற்றா நோய்கள், மன அழுத்தம் மற்றும் மனநலக் கோளாறுகளைக் கையாள்வதற்கும், அதன் மூலம் தடுப்பு மற்றும் ஒருங்கிணைந்த சுகாதாரப் பராமரிப்பிற்கு ஆதரவளிப்பதற்கும், யோகாவும் இயற்கை மருத்துவமும் பயனுள்ள துணை அணுகுமுறைகளாக அங்கீகரிக்கப்பட்டு வருவதாக திரு ஜாதவ் குறிப்பிட்டார்.

அரசின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய அவர், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், இந்தியாவின் ஆரோக்கிய பொருளாதாரம், வேலைவாய்ப்பு உருவாக்கம், நல்வாழ்வுச் சுற்றுலா மற்றும் உலகளாவிய கலாச்சாரப் பரவல் ஆகியவற்றுக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகின்றன என்று கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2265163&reg=3&lang=1   

***

TV/RB/RJ


(रिलीज़ आईडी: 2265204) आगंतुक पटल : 56
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी