எஃகுத்துறை அமைச்சகம்
சத்தீஸ்கர் மாநிலத்தில் பழங்குடியினக் குழந்தைகளுக்காக கோடைகால முகாம் தொடக்கம்
प्रविष्टि तिथि:
24 MAY 2026 11:37AM by PIB Chennai
பழங்குடியினக் குழந்தைகளின் திறமைகளை வளர்க்கும் நோக்கில், தேசிய கனிம மேம்பாட்டு கழகம் (என்எம்டிசி) சத்தீஸ்கர் மாநிலம் தந்தேவாடா மாவட்டத்தின் 17 கிராமங்களில் மே 20 முதல் ஜூன் 15 வரை கோடைகால முகாம்களைத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் சுமார் 1700 குழந்தைகள் பயன்பெறுவார்கள்.
இந்த முகாம்களில் தினசரி 30 முதல் 40 குழந்தைகள் வரை பங்கேற்று வாசிப்பு, கைவினைப் பொருட்கள் செய்தல் மற்றும் இசைப் பயிற்சிகளில் ஈடுபடுகின்றனர். மேலும், அவர்களுக்குக் கபடி, கோ-கோ போன்ற விளையாட்டுகளுடன் சத்தான சிற்றுண்டிகளும் வழங்கப்படுகின்றன. 'வோஸ்கா' என்ற சமூக மேம்பாட்டு நிறுவனத்துடன் இணைந்து இந்த முகாம் நடத்தப்படுகிறது.
'வளர்ச்சியடைந்த இந்தியா' என்ற இலக்கை நோக்கி, கிராமப்புறக் குழந்தைகளின் படைப்பாற்றல் மற்றும் சமூகத் திறன்களை மேம்படுத்தி, அவர்களைத் தன்னம்பிக்கை மிக்க இளைஞர்களாக மாற்றுவதே இந்த முயற்சியின் நோக்கமாகும். இதற்குப் பெற்றோர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2264706®=3&lang=1
***
TV/VK/RJ
(रिलीज़ आईडी: 2264753)
आगंतुक पटल : 48