உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்
விவசாயிகளின் வருமானத்தை பெருக்கும் உணவுப் பதப்படுத்தும் குறு நிறுவனங்களை மேம்படுத்தும் 'பிஎம்எஃப்எம்இ' திட்டம்
प्रविष्टि तिथि:
22 MAY 2026 5:29PM by PIB Chennai
மத்திய உணவுப் பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகத்தின் இணைச் செயலாளர் திரு.தேவேஷ் தேவால், 'பிரதமரின் உணவுப் பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தின்' சாதனைகள் குறித்து புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் விளக்கினார்.
சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் 2020-இல் தொடங்கப்பட்ட இத்திட்டம், தற்போது 2026 செப்டம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முறைசாரா உணவுப் பதப்படுத்தும் துறையில் உள்ள 25 லட்சம் பதிவு செய்யப்படாத குறு நிறுவனங்களுக்குக் கடன் வசதி, நவீனத் தொழில்நுட்பம் மற்றும் சந்தை வாய்ப்புகளை வழங்குவதே இதன் நோக்கமாகும். இதன் மூலம் உணவுப் பொருட்கள் வீணாவது தடுக்கப்பட்டு, விவசாயிகளின் வருமானம் உயரும்.
இத்திட்டத்தின் கீழ் 'ஒரு மாவட்டத்திற்கு ஒரு தயாரிப்பு' என்ற அணுகுமுறை செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் நாடு முழுவதும் 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 726 மாவட்டங்களில், 137 தனித்துவமான பாரம்பரியப் பொருட்கள் கண்டறியப்பட்டு, அவற்றுக்குச் சிறப்பு ஆதரவும் சந்தை வாய்ப்புகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இத்திட்டம் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2264199®=3&lang=1
***
TV/VK/RJ
(रिलीज़ आईडी: 2264728)
आगंतुक पटल : 60