கூட்டுறவு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கூட்டுறவுத் துறை வளர்ச்சி: ராய்பூரில் மண்டல பயிலரங்கம்

प्रविष्टि तिथि: 22 MAY 2026 9:11PM by PIB Chennai

"கூட்டுறவு மூலம் வளம்" என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வையின்படி, மத்திய கூட்டுறவு அமைச்சகத்தின் சார்பில் ராய்பூரில் மண்டல பயிலரங்கம் நடைபெற்றது. இதில் சத்தீஸ்கர், பீகார், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநில அதிகாரிகள் பங்கேற்றனர். 'உலகளாவிய மிகப்பெரிய தானியக் களஞ்சியத் திட்டம்' மற்றும் 2 லட்சம் புதிய கூட்டுறவுச் சங்கங்களை உருவாக்குவது குறித்து இங்கு விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.

'வெண்மைப் புரட்சி 2.0' திட்டத்தின் கீழ், அடுத்த 5 ஆண்டுகளில் 75,000 புதிய பால் கூட்டுறவுச் சங்கங்களை அமைக்கவும், 46,000 சங்கங்களை வலுப்படுத்தவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்துறை பெண்களின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவதோடு, வெறும் பால் உற்பத்தியோடு நிற்காமல் உயிரி எரிவாயு , இயற்கை உரம் மற்றும் கார்பன் கிரெடிட் போன்ற பிரிவுகளிலும் விரிவடைந்து விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2264361&reg=3&lang=1

***

TV/VK/RJ


(रिलीज़ आईडी: 2264684) आगंतुक पटल : 52
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी