பாதுகாப்பு அமைச்சகம்
கடல்சார் பாதுகாப்பு ஒருங்கிணைப்புக் குழு கூட்டம், அகமதாபாத்தில் இன்று நடைபெற்றது
இடுகை இடப்பட்ட நாள்:
22 MAY 2026 5:56PM by PIB Chennai
இந்தியாவின் கடல்பகுதியில், முக்கிய எரிசக்தி உள்கட்டமைப்பு வசதிகளை நிறுவுவதற்கான பாதுகாப்பு கட்டமைப்பை மறுஆய்வு செய்து வலுப்படுத்தும் வகையில், 138-வது கடல்சார் பாதுகாப்பு ஒருங்கிணைப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம், இந்திய கடலோரக் காவல்படையின் தலைமை இயக்குநர் பரமேஷ் சிவமணி தலைமையில், மே 21, 2026 அன்று அகமதாபாத்தில் நடைபெற்றது. அதிகரித்து வரும் கடல்சார் பாதுகாப்பு தொடர்பான சவால்களை திறம்பட எதிர்கொள்ளுதல், கடல்சார் கள விழிப்புணர்வை மேம்படுத்துதல், முகமைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல், கண்காணிப்புத் திறன்களை அதிகரித்தல், ஒருங்கிணைந்த பதில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான வழிமுறைகளை மேம்படுத்துதல் ஆகியவற்றில் இக்குழு கவனம் செலுத்தியது. இக்கூட்டத்தின் போது, மாறிவரும் உலகளாவிய, பிராந்திய பாதுகாப்புச் சூழல், ஆளில்லா மற்றும் ட்ரோன் மூலமான அச்சுறுத்தல்கள் உள்ளிட்ட நவீன போர் முறைகள், அந்தமான் & நிக்கோபார் பிராந்தியத்தில் விரிவடைந்து வரும் கடல்சார் ஆய்வு நடவடிக்கைகள் ஆகியவை குறித்தும் கலந்தாலோசனைகள் நடைபெற்றன.
இக்கூட்டத்தில், இந்திய கடலோரக் காவல்படை, கடற்படை, விமானப்படை, உள்துறை அமைச்சகம், வெளியுறவு அமைச்சகம், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், நீரியல் வரைவியாளர் தலைமை இயக்குநர், கப்பல் போக்குவரத்து தலைமை இயக்குநர், புலனாய்வுப் பிரிவு, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆணையம் மற்றும் மாநில காவல் படைகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2264230®=3&lang=1
***
TV/VK/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2264671)
வருகையாளர் எண்ணிக்கை : 5