பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

காசியாபாத் கருட் ரெஜிமென்டல் பயிற்சி மையத்தில் பயிற்சி நிறைவு விழா அணிவகுப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 23 MAY 2026 12:50PM by PIB Chennai

இந்திய விமானப்படையின் சிறப்பு படையான கருட் படை வீரர்களின் பயிற்சி வெற்றிகரமாக நிறைவடைந்ததை முன்னிட்டுமே 23 அன்று காசியாபாத் சாண்டிநகர் விமானப்படை நிலையத்தில் உள்ள கருட் ரெஜிமென்டல் பயிற்சி மையத்தில் 'மரூன் பெரெட்' விழாக்கால அணிவகுப்பு நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ஏர் வைஸ் மார்ஷல் ராகுல் குப்தா, கலந்து கொண்டு அணிவகுப்பை ஆய்வு செய்தார்.

கருட் ரெஜிமென்டல் பயிற்சி மையத்தின் கமாண்டன்ட், சிறப்பு விருந்தினரை வரவேற்று, பயிற்சியின் பல்வேறு அம்சங்களைப் பற்றி விளக்கமளித்தார். வெற்றிகரமாக பயிற்சி முடித்த கருட் வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த சிறப்பு விருந்தினர், வேகமாக மாறிவரும் பாதுகாப்பு சூழ்நிலைக்கு ஏற்ப சிறப்பு படை திறன்களை மேம்படுத்தவும், கடுமையான பயிற்சியின் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த வீரர்களுக்கு மரூன் பெரெட், கருட் திறன் பதக்கம் மற்றும் சிறப்பு படை அடையாளச் சின்னங்களை அவர் வழங்கினார். மேலும் சிறந்த சாதனையாளர்களுக்கு கோப்பைகளும் வழங்கப்பட்டன.

மரூன் பெரெட் விழாக்கால அணிவகுப்பு, மிகக் கடினமான பயிற்சித் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து, இளம் சிறப்பு படை இயக்குநர்கள் ஆக உயர்ந்து, இந்திய விமானப்படையின் சிறப்பு கருட் படையில் இணையும் வீரர்களுக்கு பெருமைமிக்க தருணமாக அமைந்தது.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இந்திய விமானப்படை சிறப்பு படையினரின் பங்கைக் கருத்தில் கொண்டு, தற்போது பயிற்சி முடித்துள்ள புதிய சிறப்பு படை வீரர்கள், எதிர்காலச் சிறப்பு பணிகளை மேற்கொள்ளும் இந்திய விமானப்படையின் திறனை மேலும் வலுப்படுத்துவார்கள்.

***

(Release ID: 2264454)

TV/PKV/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2264625) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी