சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
பாஸ்போர்ட் சேவை மையத்தில் ட்ரைப்ஸ் இந்தியா விற்பனை மையம் திறப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
23 MAY 2026 6:37PM by PIB Chennai
சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் குடிமக்கள் சேவைகளை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு சமூக முன்னெடுப்புகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக, பழங்குடியினர் கூட்டுறவு சந்தை மேம்பாட்டுக் கூட்டமைப்பு (TRIFED India) உடன் இணைந்து, சென்னை சாலிகிராமம் பாஸ்போர்ட் சேவை மைய வளாகத்தில் “TRIBES India” விற்பனை மையத்தை தொடங்கியுள்ளது. இங்கு கைவினைப் பொருட்கள், கைத்தறி பொருட்கள், இயற்கை உணவுப் பொருட்கள் மற்றும் வன பொருட்கள் இங்கு விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த நிகழ்வில் இந்தியப் பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டுக் கூட்டமைப்பு (Tribal Cooperative Marketing Development Federation of India) நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு.ராஜா முருகன் மற்றும் சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் (RPO) திரு.எஸ். விஜயகுமார் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

இந்த முயற்சி, வெளியுறவு அமைச்சகத்தின், சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தின், மக்களை மையப்படுத்திய முக்கிய திட்டங்களில் ஒன்றாகும். பாஸ்போர்ட் சேவை மையங்கள் (PSK) போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விற்பனை மையங்கள் தொடங்குவதால் பழங்குடியினர் சமூகங்களின் சமூக-பொருளாதார முன்னேற்றத்தை ஊக்குவிப்பதுடன், அவர்களின் தயாரிப்புகளுக்கு நேரடி விற்பனை வாய்ப்புகளை உருவாக்க முடியும்.
***
TV/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2264593)
வருகையாளர் எண்ணிக்கை : 19