சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
இந்திய பட்டயக் கணக்காளர் கழக பட்டமளிப்பு விழா
இடுகை இடப்பட்ட நாள்:
23 MAY 2026 6:08PM by PIB Chennai
இந்தியப் பட்டயக் கணக்காளர்கள் கழகம் (ICAI), இன்று (23 மே 2026) நாடு முழுவதும், சென்னை கலைவாணர் அரங்கம் உட்பட 23 இடங்களில் 2026 ஆம் ஆண்டிற்கான பட்டமளிப்பு விழாவை நடத்தியது. இந்தியா முழுவதும் புதிதாக தகுதி பெற்ற 9057 பட்டயக் கணக்காளர்களுக்கு உறுப்பினர் சான்றிதழ் வழங்கப்பட்டது மற்றும் ஜனவரி 2026 இல் நடைபெற்ற பட்டயக் கணக்காளர் தேர்வுகளில் தரவரிசை பெற்றவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

முதன்மை விருந்தினர் பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் திரு சல்லா ஸ்ரீநிவாசுலு செட்டி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினார். ஐசிஏஐ தலைவர் பிரசன்ன குமார் நிகழ்வில் உரையாற்றி, புதிதாக தகுதி பெற்ற பட்டயக் கணக்காளர்களுக்கு உறுதிமொழி செய்து வைத்தார். ICAI துணைத் தலைவர் மாங்கேஷ் பண்டுரங்க் கினாரே நிகழ்வில் உரையாற்றினார். தொடக்க விழா நிகழ்வு 23 மையங்களிலும் காணொளி மூலம் மும்பையிலிருந்து நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.
சென்னை மையத்தில், 450 புதிய தகுதி பெற்ற பட்டயக் கணக்காளர்களுக்கு உறுப்பினர் சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும்பட்டயக் கணக்காளர் தேர்வுகளில் தரவரிசை பெற்ற 10 உறுப்பினர்களுக்கு பாராட்டுப் பட்டத்தை ஐ சி ஏ ஐ மத்திய கவுன்சில் உறுப்பினரும், பட்டமளிப்பு விழா ஒருங்கிணைப்பாளரும், உறுப்பினர்கள் மற்றும் மாணவர் இயக்குநரகத்தின் கூட்டுநிர்வாகியுமான ராஜேந்திர குமார் மற்றும் ஐசிஏஐ மத்திய கவுன்சில் உறுப்பினர் ஸ்ரீப்ரியா ஆகியோர் வழங்கி கௌரவித்தனர்.

***
TV/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2264565)
வருகையாளர் எண்ணிக்கை : 22