அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

இந்தியாவின் பசுமைக் குடில் வாயுக்களுக்கான கட்டமைப்புக்களை வலுப்படுத்துவது குறித்த மூன்று நாள் பயிலரங்கம்

प्रविष्टि तिथि: 22 MAY 2026 6:08PM by PIB Chennai

விரைவான வளர்ச்சி கண்டு வரும் வளரும் நாடுகளில் முன்னணி நாடாக உள்ள இந்தியா, தேசிய பசுமைக் குடில் வாயு வெளியற்றத்தை கட்டுப்படுத்துவதற்கான அமைப்புகளை வலுப்படுத்துவது, உமிழ்வு கணக்கீட்டு முறைகளை மேம்படுத்துவது, உலகளாவிய பருவநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகளை முழுவீச்சில் மேற்கொள்வது போன்ற நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. நா அவையின் பருவநிலை மாற்றத்திற்கான கட்டமைப்பு அமைப்பிடம் இது தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, 'தேசிய பசுமைக் குடில் வாயு வெளியேற்றத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கை குறித்த மூன்று நாள் அறிவுசார் பயிலரங்கம், அறிவியல் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் - இந்திய பெட்ரோலிய நிறுவனம், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்துள்ளது. இந்தப் பயிலரங்கம் 2026 மே 20 - 22 வரை டேராடூனில் உள்ள அறிவியல் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் -இந்திய பெட்ரோலிய நிறுவன வளாகத்தில் நடைபெற்றது.

இதில், பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த துறை சார்ந்த நிபுணர்கள் பங்கேற்றனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2264251&reg=3&lang=1

***

TV/SV/RJ


(रिलीज़ आईडी: 2264532) आगंतुक पटल : 48
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी