சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அசாமில் உள்ள தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து மத்திய அமைச்சர் திரு நிதின் கட்கரி ஆய்வு

प्रविष्टि तिथि: 20 MAY 2026 8:34PM by PIB Chennai

மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி தலைமையில், அசாமில் உள்ள 4,178 கிலோமீட்டர் நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களின் தரம் மற்றும் பராமரிப்புப் பணிகள் குறித்த உயர்மட்ட ஆய்வுக் கூட்டம் புதுதில்லியில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மத்திய இணையமைச்சர்கள் திரு அஜய் தம்தா, திரு ஹர்ஷ் மல்ஹோத்ரா, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் திரு நிதின் கட்கரி, சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டியதன் அவசியத்தையும், நவீன கட்டுமான முறைகளைப் பயன்படுத்தி சாலையின் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், வரவிருக்கும் பருவமழைக் காலத்தை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

குறிப்பாக, முறையான வடிகால் அமைப்புகள், மண் சரிவு பாதுகாப்பு மற்றும் அவசரக்கால விரைவுப் படைகளைத் தயார் நிலையில் வைத்திருப்பதன் மூலம் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2263444&reg=3&lang=1

***

SS/VK/PD


(रिलीज़ आईडी: 2264029) आगंतुक पटल : 40
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी