எஃகுத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சீர்மிகு நிர்வாகக் கல்வித் திட்டத்திற்காக, குர்கானில் உள்ள மேலாண்மை மேம்பாட்டு நிறுவனத்துடன் செயில் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது

प्रविष्टि तिथि: 21 MAY 2026 6:09PM by PIB Chennai

இந்திய எஃகு ஆணைய நிறுவனம் (செயில்) நிறுவனத்தின் மேலாண்மைப் பயிற்சி நிறுவனம் மற்றும் குர்கானில் உள்ள மேலாண்மை மேம்பாட்டு நிறுவனம் ஆகியவை, செயில் நிறுவனத்தில் எதிர்காலத்திற்குத் தயாரான தலைவர்களை உருவாக்குவதற்கான நிர்வாகக் கல்வித் திட்டங்களில் இணைந்து செயல்படுவதற்காக,புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

2026 மே 20 அன்று, புதுதில்லியில் உள்ள செயில் நிறுவன அலுவலகத்தில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தம், செயில் நிறுவனத்தைச் சேர்ந்த நிர்வாகிகளுக்காக வடிவமைக்கப்பட்ட தலைமைத்துவத் திட்டங்கள், வியூகம் மற்றும் புதுமை சார்ந்த கற்றல் முறைகள், மதிப்பிடத்தக்க வர்த்தக தாக்கத்திற்கான செயல்முறைக் கற்றல், வெளிநாட்டுக் கற்றல் திட்டங்கள், கூட்டு ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை, ஆகியவற்றின் மூலம் கல்விசார்  அறிவை நிகழ்நேரப்  பயன்பாட்டுடன் இணைக்கும்.

இந்த ஒத்துழைப்பு, உலகளாவிய சிறந்த நடைமுறைகளுடன் இணைந்து நிறுவனத்தின் திறனை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இயக்குனர் (பணியாளர்) திரு கே. கே. சிங் மற்றும் பிற மூத்த நிர்வாகிகள் முன்னிலையில், செயில் நிறுவனத்தின் மேலாண் பயிற்சி நிறுவனத்தின் செயல் இயக்குநர் (மனிதவளம்-கற்றல் மற்றும் மேம்பாடு) திரு சஞ்சய் தார் மற்றும் குருகிராமில் உள்ள மேலாண்மை மேம்பாட்டு நிறுவனத்தின் இண்டஸ்ட்ரி கனெக்ட் டீன் பேராசிரியர் சுமிதா ராய் ஆகியோர் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2263846&reg=3&lang=1

***

TV/SV/SE


(रिलीज़ आईडी: 2263953) आगंतुक पटल : 40
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी