நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைத்து குடிமக்களையும் உள்ளடக்கிய நிதிச் சேவைகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளில், நிதிசார் சேவைகள் துறையின் உறுதியான செயல்பாடுகள்

प्रविष्टि तिथि: 21 MAY 2026 6:14PM by PIB Chennai

உலகளாவிய அணுகல் விழிப்புணர்வு தினம் 2026-ஐ முன்னிட்டு, மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ், செயல்பட்டு வரும் நிதிச் சேவைகள் துறை, மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைத்து குடிமக்களையும் உள்ளடக்கிய நிதிச் சேவைகளை மேம்படுத்துவதில் தனது உறுதியான நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறது. வங்கி மற்றும் நிதிச் சேவைகள் துறைக்கான அணுகல் தரநிலைகள் மற்றும் வழிகாட்டுதல்களை நிதிசார் சேவைகள் துறை வெளியிட்டுள்ளது. இது, மாற்றுத்திறனாளிகள் நேரடி முறைகள், டிஜிட்டல் தளங்கள் அல்லது ஃபைஜிடல் முறை மூலம், நிதிச் சேவைகளை எளிதாக அணுகுவதற்கான தரநிலைகளை வகுத்துள்ளது.

நிதிசார் சேவைகளை எளிதில் பெறுவதற்கான இணக்கமுறை நடவடிக்கைகள் மட்டுமின்றி, அது வாடிக்கையாளர் அனுபவம், டிஜிட்டல் உள்ளடக்கம் மற்றும் சம அளவிலான நிதிப் பங்கேற்பு ஆகியவற்றின்  முக்கிய அங்கமாகும். கொள்கை ஆதரவு மற்றும் இது தொடர்பான காலமுறைப் பயிற்சிகள் மூலம், நிதி நிறுவனங்கள் சேவைகள் குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளை வலுப்படுத்த ஊக்குவிக்கப்படுகின்றன. இதன்மூலம், சேவை வழங்கல் மற்றும் டிஜிட்டல் மாற்றத்தின் ஒவ்வொரு கட்டத்திலும், அதன் அணுகல்தன்மை ஒருங்கிணைக்கப்படுவதை உறுதிசெய்ய முடியும். இதில், எந்தவொரு வாடிக்கையாளரும் பின்தங்கிவிடாத வகையில், தடையற்ற மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய ஒரு நிதிச் சூழலமைப்பைக் கட்டமைப்பதற்காக, அனைத்து வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினர் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என நிதி சேவைகள் துறை  வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2263850&reg=3&lang=1

***

TV/SV/SE


(रिलीज़ आईडी: 2263936) आगंतुक पटल : 48
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी