இந்திய போட்டிகள் ஆணையம்
azadi ka amrit mahotsav

பிசிபி ஆசியா II டாப்கோ V பிரைவேட் லிமிடெட், ஆசியா II டாப்கோ XIV பிரைவேட் லிமிடெட், பிற முதலீட்டாளர்கள் நெய்ஸா நெட்வொர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சில பங்குரிமைகளைக் கையகப்படுத்துவதற்கு சிசிஐ ஒப்புதல்

இடுகை இடப்பட்ட நாள்: 20 MAY 2026 7:42PM by PIB Chennai

பிசிபி ஆசியா II டாப்கோ V பிரைவேட் லிமிடெட், ஆசியா II டாப்கோ XIV பிரைவேட் லிமிடெட், மேலும் பிற முதலீட்டாளர்கள், நெய்சா நெட்வொர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் குறிப்பிட்ட பங்குரிமைகளைக் கையகப்படுத்துவதற்கு இந்தியப் போட்டி ஆணையம் (சிசிஐ) ஒப்புதல் அளித்துள்ளது.

முன்மொழியப்பட்ட இந்த இணைப்பின்படி, பிளாக்ஸ்டோன் நிறுவனம், அதன் துணை நிறுவனங்களான பிசிபி  ஆசியா II டாப்கோ V பிரைவேட் லிமிடெட் மற்றும் ஆசியா II டாப்கோ XIV பிரைவேட் லிமிடெட் மூலம் செயல்பட்டு, நெய்ஸா நெட்வொர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் (நெய்ஸா) நிறுவனத்தில் கட்டுப்படுத்தப்பட்ட  பங்கைப் பெற முன்மொழிகிறது.

பிளாக்ஸ்டோனுடன் சேர்ந்து, 360 ஒன் பிரைவேட் ஈக்விட்டி ஃபண்ட், டிவிஎஸ் ஸ்ரீராம் குரோத் ஃபண்ட் 4, நெக்ஸஸ் வென்ச்சர்ஸ் VII ஹோல்டிங்ஸ், எல்எல்சி (நெக்ஸஸ்), ஆங்கரேஜ் கேப்பிட்டல் ஸ்கீம் III, திரு ஷரத் சாங்கி (நெய்ஸாவின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி), 1001502130 ஒன்டாரியோ லிமிடெட் (இணை முதலீட்டாளர்) ஆகிய முதலீட்டாளர்களும் நெய்ஸாவில் குறிப்பிட்ட பங்குகளைப் பெறுவார்கள்.

ஆணையத்தின் விரிவான உத்தரவு விரைவில் வெளியிடப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2263411&reg=3&lang=1

***

SS/EA/SE


(வெளியீட்டு அடையாள எண்: 2263926) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी