தேசிய மனித உரிமைகள் ஆணையம்
மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் கல் குவாரி உரிமையாளர்களுடன் தொடர்புடைய கும்பல் நடத்திய தாக்குதலில் ஆர்வலர் உயிரிழந்தது குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
20 MAY 2026 8:15PM by PIB Chennai
மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டம் விரார் கிழக்கு ஷிர்கான் பகுதியில் உள்ள கல் குவாரியில் சட்டவிரோத நடவடிக்கைகள் நடப்பதாக அரசு இணையதளத்தில் புகார்கள் வந்தன. இதையடுத்து, கடந்த 2026 மே 12 அன்று அங்கு ஆய்வுக்குச் சென்ற அரசியல் ஆர்வலர் மற்றும் மண்டல வருவாய் அதிகாரி ஆகியோரை குவாரி உரிமையாளர்களுடன் தொடர்புடைய கும்பல் ஒன்று வாகனத்திலிருந்து இழுத்துத் தடிகளாலும் கற்களாலும் தாக்கியுள்ளது. இதில் அந்த ஆர்வலர் உயிரிழந்தார், அதிகாரி காயமடைந்தார்.
ஊடகங்களில் வெளியான இச்செய்தி உண்மையாக இருக்குமானால், அது கடுமையான மனித உரிமை மீறல் என்று ஆணையம் தெரிவித்துள்ளது. எனவே, இது குறித்து இரண்டு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு மகாராஷ்டிரா மாநில காவல்துறை தலைமை இயக்குனர் மற்றும் பால்கர் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த அறிக்கையில், வழக்கின் விசாரணை நிலை மற்றும் வருவாய் அதிகாரியின் உடல்நலம் குறித்த விவரங்கள் இடம் பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2263432®=3&lang=1
***
SS/EA/SE
(வெளியீட்டு அடையாள எண்: 2263917)
வருகையாளர் எண்ணிக்கை : 9