சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உத்தரப்பிரதேசத்தில் 11,672 கிமீ தொலைவிலான தேசிய நெடுஞ்சாலை கட்டமைப்பின் தரம் மற்றும் பராமரிப்புக் குறித்து மத்திய அமைச்சர் திரு நிதின் கட்கரி ஆய்வு செய்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 21 MAY 2026 3:52PM by PIB Chennai

ஊடகம் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் பெறப்பட்ட பின்னோட்டத்தின் அடிப்படையில் உத்தரப்பிரதேசத்தில் 11,672 கிமீ தொலைவிலான தேசிய நெடுஞ்சாலை கட்டமைப்பின் தரம் மற்றும் பராமரிப்புக் குறித்து மத்திய அமைச்சர் திரு நிதின் கட்கரி இன்று (21.05.2026) புதுதில்லியில் ஆய்வு செய்தார். இதில் மத்திய இணையமைச்சர்கள் திரு அஜய் தம்தா, திரு ஹர்ஷ் மல்ஹோத்ரா, இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய அதிகாரிகள், திட்ட ஒப்பந்ததாரர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது, நீடித்த மற்றும் திறன்மிக்க நெடுஞ்சாலை  உள்கட்டமைப்பை உறுதி செய்ய பணிகளை உரிய நேரத்தில் நிறைவு செய்வது, தர நிர்ணயங்களை முறையாக பின்பற்றுவது, மேம்பட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து திரு கட்கரி வலியுறுத்தினார்.  போக்குவரத்தை மேம்படுத்துவதற்கும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் பயணிகளின் வசதிகளை அதிகரிப்பதற்கும் வலுவான சாலைக் கட்டமைப்புகள் அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.

சாலைப் பாதுகாப்பை  பராமரிக்க திறன்மிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பருவ மழைக் காலங்களில் சாலைகள் சேதமடைவதைத் தடுக்கும் வகையிலும் பணிகளை மேற்கொள்ளுமாறும் அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2263724&reg=3&lang=1

***

SS/IR/KPG/SE


(வெளியீட்டு அடையாள எண்: 2263890) வருகையாளர் எண்ணிக்கை : 73
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी