சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
திருநெல்வேலியில் புதிய ஆதார் சேவை மையம் திறக்கப்பட்டுள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
21 MAY 2026 5:22PM by PIB Chennai
இந்திய தனித்துவ அடையாள ஆணையம், திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் புதிய ஆதார் சேவை மையத்தை இன்று (21.05.2026) திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆர் சுகுமார் பங்கேற்று திறந்து வைத்தார்.

புதிய பதிவு, பயோமெட்ரிக் புதுப்பித்தல், பிழை திருத்தம் மற்றும் குறை தீர்க்கும் சேவைகளை இந்த மையம் அளிக்கவுள்ளது. பொது விடுமுறை நாட்களைத் தவிர அனைத்து நாட்களிலும் இந்த மையம் செயல்படும். திருநெல்வேலியில் இந்தப் புதிய மையம் தொடங்கப்பட்டது குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி விளம்பரம் செய்யுமாறு ஆட்சியர் டாக்டர் ஆர் சுகுமார் கேட்டுக் கொண்டார்.
இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் பெங்களூரு மண்டல அலுவலகத்தின் துணை இயக்குநர் திருமதி பிரியா ஸ்ரீகுமார் பேசிய போது, கிருஷ்ணகிரி, வேலூர், விழுப்புரத்தைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் செயல்படும் 6-வது ஆதார் சேவை மையம் இது என்று குறிப்பிட்டார்.
இந்த எண்ணிக்கை 2026 செப்டம்பர் மாதத்திற்குள் தமிழ்நாட்டில் மொத்தம் 30 மையங்களாக அதிகரிக்கும் வகையில், மேலும் 24 மையங்களைத் திறக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். பொதுமக்கள் தங்களது முன்பதிவுகளை https://bookappointment.uidai.gov.in/ என்ற இணையதளம் மூலம் செய்து கொள்ளலாம்.
அத்துடன், 5 முதல் 17 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான கட்டாய பயோமெட்ரிக் புதுப்பிப்புகள், இந்த மையங்கள் மற்றும் பள்ளி முகாம்கள் மூலம் 2026 செப்டம்பர் மாதம் வரை கட்டணமில்லாமல் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.
----
AD/IR/KPG/SE
(வெளியீட்டு அடையாள எண்: 2263876)
வருகையாளர் எண்ணிக்கை : 37