நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புதுதில்லியில் அடல் ஓய்வூதிய திட்ட ஆண்டு பாராட்டு விழா: நிதிச் சேவைகள் துறைச் செயலாளர் பங்கேற்பு

இடுகை இடப்பட்ட நாள்: 20 MAY 2026 8:09PM by PIB Chennai

ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம்  சார்பில் அடல் ஓய்வூதிய திட்டத்தின் ஆண்டு பாராட்டு விழா புதுதில்லியில் நடைபெற்றது. கடந்த 2025-26 நிதியாண்டில் இத்திட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை சிறப்பாக எட்டிய 53 வங்கிகள், 10 மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுக்கள்  மற்றும் சிறந்த கிளைகளுக்கு விழாவில் விருதுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் பேசிய நிதிச் சேவைகள் துறைச் செயலாளர் திரு எம் நாகராஜு, சமூகப் பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்திய வங்கிகளின் கூட்டு முயற்சியைப் பாராட்டினார். இத்திட்டத்தின் மொத்த சேர்க்கை 9 கோடியைத் தாண்டியுள்ளதாகவும், தற்போது பெண்களின் பங்களிப்பு 55.14 சதவீதமாக உயர்ந்து சாதனை படைத்துள்ளதாகவும் கூறினார். பி எஃப் ஆர் டி ஏ  தலைவர் திரு எஸ் ராமன் பேசுகையில், 18 முதல் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே இத்திட்டம் குறித்த விழிப்புணர்வு கணிசமாக அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும், இத்திட்டத்தின் பொருளாதாரப் பிரிவு முழுநேர உறுப்பினர் திருமதி மம்தா சங்கர், திட்டத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்ட அனைத்துப் பங்களிப்பாளர்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

இந்த நிதியாண்டில் பொதுத்துறை வங்கிகளில் பாரத ஸ்டேட் வங்கி 116 சதவீதமும், தனியார் வங்கிகளில் ஐடிபிஐ  வங்கி 156 சதவீதமும் இலக்கை எட்டி சாதனை படைத்துள்ளன. மாநில அளவில் ஜார்கண்ட், பீகார் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் முன்னிலையில் உள்ளன. நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு ஓய்வூதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவருக்கும் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யத் தொடர்ந்து பாடுபடப் போவதாக ஆணையம் உறுதியளித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2263426&reg=3&lang=1

***

SS/VK/SE


(வெளியீட்டு அடையாள எண்: 2263868) வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी