நித்தி ஆயோக்
azadi ka amrit mahotsav

அகமதாபாத்தில் அடிப்படை நிலை, கண்டுபிடிப்புகள் குறித்த தேசிய பயிலரங்கம்: மத்திய அமைச்சர் திரு ஜிதேந்திர சிங் பங்கேற்பு

प्रविष्टि तिथि: 20 MAY 2026 8:00PM by PIB Chennai

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சயின்ஸ் சிட்டியில், அடிப்படை நிலை கண்டுபிடிப்புகளுக்கான இரண்டு நாள் தேசிய அளவிலான பயிலரங்கம் மே 19, 20 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. நித்தி ஆயோக், குஜராத் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் குழுமம் மற்றும் தேசிய புதுமை கண்டுபிடிப்பு அறக்கட்டளை ஆகியவற்றுடன் இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இதில் நாடு முழுவதிலும் உள்ள அடிப்படைநிலை கண்டுபிடிப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாநிலப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராகப் பங்கேற்ற மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர்  திரு ஜிதேந்திர சிங் பேசுகையில், இந்தியாவின் சுயசார்பு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு அடிப்படை நிலை கண்டுபிடிப்புகள் மிகவும் முக்கியம் என்றும், 'வளர்ச்சியடைந்த இந்தியா 2047' இலக்கை அடைய இத்தகைய உள்ளூர் கண்டுபிடிப்புகளை தேசிய வளர்ச்சித் திட்டங்களுடன் இணைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். குஜராத் மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு அர்ஜுன்பாய் தேவாபாய் மோத்வாடியா, அடிப்படை கண்டுபிடிப்பாளர்களுக்கு வலுவான நிறுவன ஆதரவை வழங்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

நித்தி ஆயோக்கின் முன்னாள் உறுப்பினர் திரு வி கே சரஸ்வத், தேசிய கண்டுபிடிப்பு அறக்கட்டளையின் தலைவர் திரு அனில் சஹஸ்ரபுத்தே உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த நிபுணர்கள், உள்ளூர் அறிவை முதன்மைப் படுத்துவது மற்றும் சந்தை வாய்ப்புகளை உருவாக்குவது குறித்துப் பேசினர். இந்நிகழ்ச்சியில் மண் பொருட்கள், வாழை நார் பொருட்கள் மற்றும் கிராமப்புற இயந்திரங்கள் போன்ற பல்வேறு உள்ளூர் கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2263421&reg=3&lang=1

***

SS/VK/KR


(रिलीज़ आईडी: 2263655) आगंतुक पटल : 32
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: हिन्दी , Urdu , English , Gujarati