சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மாற்றுத் தகராறு தீர்வு முறையை வலுப்படுத்த பிரிக்ஸ் நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகள் கூட்டம்

இடுகை இடப்பட்ட நாள்: 20 MAY 2026 6:12PM by PIB Chennai

இந்தியாவின் பிரிக்ஸ் (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் அடங்கிய கூட்டமைப்பு) 2026-ஆம் ஆண்டுத் தலைமைப் பொறுப்பின் கீழ், மாற்றுத் தகராறு தீர்வு முறையிலான ஒத்துழைப்பை ஆழமாக்குவதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் சட்ட விவகாரங்கள் துறை சார்பில் உயர்மட்ட அதிகாரிகள் கூட்டம் குஜராத் மாநிலம் காந்திநகரில் நடைபெற்றது.

மே 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இணையவழியாகவும், நேரடியாகவும் நடைபெற்ற இக்கூட்டத்தில் பிரேசில், சீனா, இந்தியா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், இந்தோனேசியா, ரஷ்யா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தின் நிறைவாக, "மத்தியஸ்தம் மற்றும் தீர்ப்பாயம் மூலம் திறன் மேம்பாட்டை ஏற்படுத்தி, மாற்றுத் தகராறு தீர்வு முறையை வலுப்படுத்துதல்" என்ற கூட்டுப் பிரகடனத்திற்கு அனைத்து நாடுகளும் ஒப்புதல் அளித்தன. இந்த கூட்டுப் பிரகடனம், மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் காந்திநகரில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் நாடுகளின் நீதி அமைச்சர்கள் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

இக்கூட்டத்தில், நிறுவன ரீதியிலான மத்தியஸ்தம், தீர்ப்பாய சீர்திருத்தங்கள், வணிக மற்றும் பொதுத்துறை விவாதங்களில் மாற்றுத் தகராறு தீர்வு முறையின் பங்கு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும், மாற்றுத் தகராறு தீர்வு முறையை எளிதில் அணுகக்கூடிய மற்றும் பயனுள்ள வழியாக மாற்றியமைப்பதற்கான பிரிக்ஸ் நாடுகளின் கூட்டுப் பொறுப்பை உறுதிசெய்யும் வகையில் இந்த பிரகடனம் இறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2263346&reg=3&lang=1

 

செய்தி அடையாள எண்: 2263346

****

TV/VK/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2263485) வருகையாளர் எண்ணிக்கை : 14
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati , Kannada