திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
தொழில்முறை கல்வி மற்றும் பயிற்சி தேசிய கவுன்சில் ஆராய்ச்சிப் பிரிவை வலுப்படுத்த முதல் ஆலோசனை கூட்டம்
இடுகை இடப்பட்ட நாள்:
20 MAY 2026 6:02PM by PIB Chennai
மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் என்சிவிஇடி அமைப்பின் ஆராய்ச்சி ஆலோசனைக் குழுவின் (ஆர்ஏசி) முதல் கூட்டம் அதன் தலைவர் தேவஸ்ரீ முகர்ஜி தலைமையில் தில்லியில் நடைபெற்றது. தொழில்முறை கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையில் தரவு சார்ந்த கொள்கைகளை உருவாக்குவதே இக்கூட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இக்கூட்டத்தில் நிதி ஆயோக், தொழிலாளர் அமைச்சகம், சிஐஐ, ஐஐஎம் கல்கத்தா மற்றும் அசோகா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு அரசு மற்றும் கல்வி நிறுவனங்களின் நிபுணர்கள் பங்கேற்றனர். இதில், திறன் இடைவெளிகளைக் கண்டறிதல், புதிய தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வது மற்றும் திறன் மேம்பாட்டில் இளைஞர்களின் கருத்துகளுக்கு முன்னுரிமை அளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், இக்குழு ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கூடி அடுத்தகட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்யும் என முடிவெடுக்கப்பட்டது.
இந்தியாவை உலகளாவிய திறன் தலைநகராக மாற்ற, தரவு சார்ந்த ஆராய்ச்சிகள் மிக அவசியம் என்று தேவஸ்ரீ முகர்ஜி குறிப்பிட்டார். இந்த புதிய ஆராய்ச்சிப் பிரிவு கொள்கை உருவாக்கம், தர உத்தரவாதம் மற்றும் நீண்ட கால திட்டமிடலுக்கு உதவும் என்று என்சிவிஇடி நிர்வாக உறுப்பினர் பேராசிரியர் அசோக் குமார் காபா தெரிவித்தார். கடந்த ஜனவரி 2026-இல் அங்கீகரிக்கப்பட்ட இந்த ஆராய்ச்சிப் பிரிவு, இந்தியாவின் தொழில்முறை கல்வித் தரத்தை உலக அளவிற்கு உயர்த்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2263340®=3&lang=1
செய்தி அடையாள எண்: 2263340
****
TV/VK/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2263478)
வருகையாளர் எண்ணிக்கை : 13