சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

சென்னையில் உள்ள மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் மற்றும் ஐசிஎம்ஆர், தேசியக் காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இடுகை இடப்பட்ட நாள்: 20 MAY 2026 6:52PM by PIB Chennai

காசநோய் இல்லாத இந்தியா என்னும் நோக்கத்தின் ஒரு முன்முயற்சியாக, மத்திய அரசின் சுகாதாரம் மற்றும்  குடும்பநல அமைச்சகத்தின் கீழ் சென்னையில் இயங்கும் ஐசிஎம்ஆர் - தேசியக் காசநோய் ஆராய்ச்சி நிறுவனமும், மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் சென்னையில் உள்ள மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமமும் இணைந்து செயல்படும் வகையில் 19.05.2026 அன்று மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத் தலைமையகத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

 

இதில் மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தின் தலைமை இயக்குநர் பேராசிரியர் மருத்துவர் நா ஜெ முத்துகுமார்சென்னை தேசியக் காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் மருத்துவர் ஸ்ரீநாத் சத்யநாராயணா ஆகியோர் கையொப்பமிட்டனர்.

 

பாரம்பரிய சித்த மருத்துவத்தின் மூலம் காசநோய்க்கான மருத்துவப் பரிசோதனைகள்மேம்பட்ட புதுமையான மருந்துகள்திறன்களைக் கட்டமைத்தல்ஊட்டச்சத்து வழங்கல் ஆகியவற்றின் வழியாக ஓர் ஒருங்கிணைந்த உத்தியை மேம்படுத்த இரு நிறுவனங்களைச் சேர்ந்த மருத்துவ அறிவியலறிஞர்கள் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. காசநோயை முற்றிலும் ஒழிப்பதற்கான ஒரு முழுமையான தீர்வை வழங்கவும், ‘காசநோய் இல்லாத இந்தியா’ என்ற தொலைநோக்குப் பார்வையை அடையவும் ஒரு முதன்மை நிகழ்வாக இது அமைந்திருந்தது. 

 

தொடர்ந்து, ‘காசநோய் இல்லாத இந்தியா இயக்கம் எனும் 100 நாள்’, பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, ‘இந்தியாவில் காசநோயை ஒழிப்பதில் சித்தமருத்துவத்தின் எதிர்கால வாய்ப்புகள்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்  https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2263374&reg=3&lang=1

 

***

SS/IR/KPG/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2263383) வருகையாளர் எண்ணிக்கை : 52
இந்த வெளியீட்டை படிக்க: English